வீடியோ: 2 பந்தில் 2 விக்கெட்.. மின்னல் வேகத்தில் பறந்த ஸ்டம்ப்… பந்துவீச்சில் மிரட்டிய மார்க் வுட்!

தனது மின்னல்வேக பந்துவீச்சில் இரண்டு லக்னோ வீரர்களை அடுத்தடுத்த பந்தில் போல்டு செய்து மிரட்டியுள்ளார் மார்க் வுட். வீடியோவை கீழே காண்போம்.

இந்த ஐபிஎல் சீசனின் மூன்றாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் லக்னோவில் உள்ள மைதானத்தில் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

 

இதனையடுத்து பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்கு, துவக்கவீரர் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். மற்றொரு துவக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள் உட்பட 73 ரன்கள் அடித்தார்.

நிக்கோலஸ் பூரன் மூன்று சிக்ஸர்கள் இரண்டு பவுண்டரிகள் உட்பட 21 பந்துகளில் 36 ரன்களை அடித்து வெளியேறினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 5 விக்கெடுகள் இழப்பிற்கு 193 ரன்கள் அடித்தது.

சற்று கடினமாக 194 ரன்கள் இலக்கை சேஸ் செய்து வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ப்ரிதிவி ஷா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் இருவரும் ஓபனிங் செய்தனர். 2 பவுண்டரிகளுடன் சிறப்பாக துவங்கினார் ஷா.

போட்டியின் 5ஆவது ஓவரை மார்க் வுட் வீசினார். ஷா 12 ரன்கள் அடித்திருத்தபோது, 3ஆவது பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியை புரட்டியெடுத்த மிட்ச்சல் மார்ஷ் அடுத்ததாக உள்ளே வந்தார். இவரையும் முதல் பந்திலேயே க்ளீன் போல்டு செய்து மிரட்டினார் மார்க் வுட். இரண்டு பந்துகளை 147+ கிமீ வேகத்தில் வீசப்பட்டதாகும்.

பின்னர் களமிறங்கிய கீப்பர் சர்பராஸ் கான் 4 ரன்களில் மார்க் வுட் பந்தில் ஆட்டமிழந்தார். 48 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி தடுமாறியபோது, ரைலி ருசோவ் மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சேர்ந்தனர். நான்காவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 38 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடி வந்த ருசோவ் 20 பந்துகளில் 30 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார்.

களத்தில் வார்னர் மற்றும் ரோவ்மன் பவல் இருவரும் இருக்கின்றனர். வார்னர் 40 ரன்கள் கடந்து விளையாடி வருகிறார். மார்க் வுட் 3 ஓவர்களில் 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்களின் ஸ்டம்ப்பை மார்க் வுட் தெறிக்கவிட்ட வீடியோ:

Mohamed:

This website uses cookies.