4 கேட்ச்… 1 முக்கியமான ரன் அவுட்… ஹைதராபாத் அணிக்கு வில்லனாக மாறிய டிம் டேவிட்; மும்பையிடம் போராடி தோற்றது ஹைதராபாத் !!

4 கேட்ச்… 1 முக்கியமான ரன் அவுட்… ஹைதராபாத் அணிக்கு வில்லனாக மாறிய டிம் டேவிட்; மும்பையிடம் போராடி தோற்றது ஹைதராபாத்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மார்கரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேமிரான் க்ரீன் 64* ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா 17 பந்துகளில் 37 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 192 ரன்கள் எடுத்தது.

இதன்பின் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஹாரி ப்ரூக் (9), ராகுல் திரிபாதி (7), மார்கரம் (22) மற்றும் அபிசேக் ஷர்மா (1) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். நீண்டநேரம் தாக்குபிடித்த மாயன்க் அகர்வால் 48 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசன் 16 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். இதன்பின் களமிறங்கிய ஜென்சன் 13 ரன்களும், வாசிங்டன் சுந்தர் 10 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து கொண்டே இருந்த ஹைதராபாத் அணி 19.5 ஓவரில் 178 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததால், மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா, மெரிடித் மற்றும் பெஹண்ட்ரூஃப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான டிம் டேவிட் இந்த போட்டியில் 4 கேட்ச் மற்றும் முக்கியமான நேரத்தில் ஒரு ரன் அவுட் என மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

Mohamed:

This website uses cookies.