6 ஓவரில் 94 ரன்கள்… மரண அடி வாங்கிய மும்பை… சிக்ஸர் மழை பொழிந்த குஜராத் அணி வீரர்கள்; மும்பை இந்தியன்ஸிற்கு கடின இலக்கு !!

6 ஓவரில் 94 ரன்கள்… மரண அடி வாங்கிய மும்பை… சிக்ஸர் மழை பொழிந்த குஜராத் அணி வீரர்கள்; மும்பை இந்தியன்ஸிற்கு கடின இலக்கு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 35வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன.

அஹமதாபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணிக்கு விர்திமான் சஹா 4 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா (13) மற்றும் விஜய் சங்கர் (19) ஆகியோர் பெரிதாக சோபிக்கவில்லை. இதன்பின் கூட்டணி சேர்ந்த அபினவ் மனோகர் – டேவிட் மில்லர் ஜோடி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது.

அபினவ் மனோகர் 21 பந்துகளில் 42 ரன்களும், அதிரடி நாயகன் டேவிட் மில்லர் 22 பந்துகளில் 46 ரன்களும், கடைசி நேரத்தி களத்திற்கு வந்த ராகுல் திவாட்டியா 5 பந்துகளில் 20 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், கடைசி 6 ஓவர்களில் 94 ரன்கள் குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி, ஒரே போட்டியில் அடித்த அதிகபட்ச ரன்கள் இது தான். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கேமிரான் க்ரீனை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.