நடராஜன் மிரட்டல் பந்துவீச்சு… கடைசி நேரத்தில் சொதப்பிய கொல்கத்தா வீரர்கள்; ஹைதராபாத்திற்கு சவாலான இலக்கு !!

நடராஜன் மிரட்டல் பந்துவீச்சு… கடைசி நேரத்தில் சொதப்பிய கொல்கத்தா வீரர்கள்; ஹைதராபாத்திற்கு சவாலான இலக்கு

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்துள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஜேசன் ராய் (20) மற்றும் குர்பாஸ் (0) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய வெங்கடேஷ் ஐயரும் 7 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

இதன்பின் கூட்டணி சேர்ந்த ரிங்கு சிங் – நிதிஷ் ராணா ஜோடி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு ரன் சேர்த்தது. நிதிஷ் ராணா 42 ரன்களிலும், ரிங்கு சிங் 46 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

இதன்பின் களமிறங்கிய ஆண்ட்ரியூ ரசல் 24 ரன்கள் எடுத்து கொடுத்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் கடைசி ஓவர்களை சரியாக பயன்படுத்த தவறியதாலும், நடராஜனின் சிறப்பான பந்துவீச்சாளும், போட்டியின் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ள கொல்கத்தா அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக மார்கோ ஜென்சர் மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mohamed:

This website uses cookies.