கேப்டனா இல்லேனாலும் இது என்னோட டீம்டா… மீண்டும் சதம் அடித்து மிரட்டிய கோலி;197 ரன்கள் குவித்தது பெங்களூர் அணி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.
16வது ஐபிஎல் தொடரின் 70வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
பெங்களூர் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை தீர்மானிக்கும் வாழ்வா சாவா போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் 28 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய மேக்ஸ்வெல் 11 ரன்னிலும், அடுத்ததாக களத்திற்கு வந்த லம்ரோர் 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
கடந்த போட்டியை போன்று இந்த போட்டியிலும் மிக மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 60 பந்துகளில் சதம் அடித்து அசத்திய விராட் கோலி மொத்தம் 61 பந்துகளில் 101* ரன்களும், பிரேஸ்வெல் 26 ரன்களும், அனுஜ் ராவத் 23 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 197 ரன்கள் எடுத்துள்ளது.