தோனியின் அறிவுரை கேட்டுதான் இந்த யுக்தியை பயன்படுத்துகிறேன்; வெளிப்படையாக பேசிய ரின்கு சிங் !!

தோனியின் அறிவுரை கேட்டுதான் இந்த யுக்தியை பயன்படுத்துகிறேன்; வெளிப்படையாக பேசிய ரின்கு சிங்..

தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிர்க்கு இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் CSK அணியின் கேப்டன் தோனியின் அறிவுரை தான் காரணம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ரின்கு சிங் தெரிவித்துள்ளார்.

என்னதான் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் மற்ற அணிகளில் விளையாடிய இளம் வீரர்களின் செயல்பாடு இன்றும் பேசப்பட்டு வருகிறது.குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால், கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ரின்கு சிங்,பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் துவக்க பிரப்சிம்ரன் போன்ற வீரர்களின் செயல்பாடு பராட்டுக்கூறியதாக உள்ளது.

அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 479 ரன்கள் அடித்து இந்திய கிரிக்கெட் வட்டத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிர்க்கெட் வட்டத்திலும் பேசுபொருளாக திகழ்ந்த இந்திய அணியின் இளம் வீரர் ரின்கு சிங்., தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிர்க்கு CSK அணியின் கேப்டன் தோனி கொடுத்த அறிவுரையும் முக்கிய காரணம் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரின்கு சிங் தெரிவித்ததாவது.,“ “சென்னை அணிக்கு இடையிலான போட்டியின் பொழுது நான் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது, அந்த போட்டியில் எப்படி நெருக்கடியான நேரத்தில் ஒரு பினிஷராக சிறப்பாக செயல்படுவது என கேட்டேன். அதற்கு பதிலளித்த தோனி., பந்துவீச்சாளர்கள் அவர்களுக்கு தோன்றும் வகையில் எப்படி வேணாலும் வந்து வீசலாம், ஆனால் நீ நின்று போட்டியை முடித்து கொடுப்பதில் கவனம் செலுத்து. அதற்குப் பின் நான் கடுமையாக பயிற்சி செய்தேன், நான் புதிதாக பேட்டிங்கில் எதையும் செயல்படுத்துவது குறித்து முயற்சி செய்யவில்லை. மாறாக என்னுடைய பலம் எதுவோ அதற்கு ஏற்றார் போல் விளையாடினேன், மேலும் சென்னைஅணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எனக்கு கொடுத்த அறிவுரையை நான் பயன்படுத்தி அதிகமாக ஸ்ட்ரைட் திசையில் அடிக்கிறேன் அது மிகவும் சிறப்பாக உள்ளது” என்று ரின்கு சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed Ashique:

This website uses cookies.