கடைசியாக 2013இல் ஆடியவர்…10 வருடங்களாக ஐபிஎல் ஆடாத வீரரை எடுத்துள்ள ஆர்சிபி; ரீஸ் டாப்லே-க்கு மாற்றாக அறிவிப்பு!

ரீஸ் டாப்லே, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு ஐபிஎல் தொடரிலிருந்து  விலகியுள்ளார். இவருக்கு மாற்று வீரராக  தென்னாபிரிக்கா ஆல்ரவுண்டர் வெயின் பர்னல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இங்கிலாந்து அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லே, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் இடம்பெற்று விளையாடினார். போட்டியின் போது கீழே விழுந்து இவரது தோள்பட்டை பிசகு ஏற்பட்டிருக்கிறது. இதனால் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியில் அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ உதவி பெற்று வந்தார்.

இரண்டாவது லீக் போட்டியில் இவர் இடம்பெறவில்லை. டேவிட் வில்லே பிளேயிங் லெவலில் எடுக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ரீஸ் டாப்லே குணமடைய காலதாமதம் ஆகும் என்பதால் அவரை நாட்டிற்கு அனுப்புகின்றோம். மாற்று வீரர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று கோச் சஞ்சய் பாங்கார் தெரிவித்தார். அதற்கேற்றாற்போல் நேற்று லண்டன் சென்றுவிட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவருகிறார்.

ரீஸ் டாப்லே மற்றுவீரராக தென்னாபிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் வெயின் பர்னல் எடுக்கப்பட்டிருக்கிறார். இவர் 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை புனே வாரியார்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு சில சர்ச்சைகள், சர்வதேச போட்டிகள், காயங்கள் காரணமாக 10 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை.

 

இவரை எதற்காக எடுத்தார்கள் என்கிற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இழந்து வந்தாலும், அணியின் முன்னணி பவுலர்கள் ஹசரங்கா, சர்வதேச போட்டிகள் முடிந்து வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி ஐபிஎல் போட்டிகளுக்கு திரும்புகிறார். ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட், காயத்திலிருந்து குணமடைந்து விட்டார். இவரும் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ஐபிஎல் போட்டிகளுக்கு வந்துவிடுவார் என்று அப்டேட் கொடுத்துள்ளார் சஞ்சய் பாங்கார். இது ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

முதல் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்த ஆர்சிபி அணி, இரண்டாவது லீக் போட்டியில் 81 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Mohamed:

This website uses cookies.