பாக்காத்தானே போரிங்க இந்த மும்பை பசங்க ஆட்டத்த ; இளம் மும்பை இந்தியன்ஸ் வீரர்களை புகழ்ந்த கேப்டன் ரோஹித் சர்மா..
இன்னும் இரண்டு வருடத்தில் இந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சூப்பர் ஸ்டார்களாக உருவெடுப்பார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
சமகால இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக திகழும் ஹர்திக் பாண்டியா, பும்ரா சூரியகுமார் யாதவ் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு மும்பை இந்தியன்ஸ் அணிதான் முக்கிய காரணம் என்று கூறினால் அது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி மேற்கூறப்பட்ட வீரர்கள் ஸ்டார் வீரர்களாக இல்லாத போது அவர்களின் திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை நட்சத்திர வீரரர்களாக உருவாக்கியுள்ளது.
என்னதான் மற்ற அணிகளில் விளையாடும் வீரர்களுக்கும் இந்திய அணியின் வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் மேலே சொல்லப்பட்ட வீரர்கள் போன்று பெரிய அளவு ஜொலிக்கும் வீரர்களாக உருவாகவில்லை.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவருடைய கவனத்தையும் ஒரு சில வீரர்கள் பெற்று வருகின்றனர்.
அதனை தெரியப்படுத்தும் வகையில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர கேப்டனுமான ரோஹித் சர்மா., எதிர்கால இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா, பும்ராவை போன்று சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் இரண்டு வீரர்கள் உருவாகியுள்ளனர் என்று செய்தியாளர்களின் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரோஹித் சர்மா தெரிவித்ததாவது.,
பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்களின் கதை மும்பை இந்தியன்ஸ் அணியின் எப்படி அமைந்ததோ அதேபோன்றுதான் திலக் வர்மா, நெஹல் வதெரா போன்ற வீரர்களின் கதையும் சிறப்பாக அமையும். நிச்சயம் அவர்கள் இன்னும் இரண்டு வருடத்தில் மிக சிறந்த வீரர்களாக உருவாவார்கள் அதை நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். எங்களுடைய அணி சூப்பர் ஸ்டார்களை கொண்ட அணி. நாங்கள் சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறோம் திறமையை வெளிப்படுத்தும் வீரர்களை கண்டுபிடிப்பது மற்றும் தேடுதலில் எப்பொழுதுமே ஈடுபடுவோம்” என மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து ரோஹித் சர்மா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.