பாவம்டா அந்த மனுஷன்… சர்துல் தாகூரின் கிர்க்கெட் கரியரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி காலி செய்யப்பாக்கிறது ; கொல்கத்தா அணியை சாடிய முன்னாள் வீரர் !!

பாவம்டா அந்த மனுஷன், சர்துல் தாகூரின் கிர்க்கெட் கரியரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி காலி செய்யப்பாக்கிறது.. ; கொல்கத்தா அணியை சாடிய முன்னாள் வீரர்..

2023 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் சர்துல் தாகூரை சரியாக பயன்படுத்தவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

 

நடந்து முடிந்த 2023 ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நித்திஷ்ரானா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், கேப்டன் நித்திஷ்ரானா மற்றும் ரின்கு சிங் ஆகிய இரண்டு வீரர்களை தவிர மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை.

குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்டார் வீரர்களான ஆண்ட்ரே ரசல் சுனில் நரேன் மற்றும் 2023 ஐபிஎல் தொடரில் அணிக்கு புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட சர்துல் தாகூர் உள்ளிட்ட வீரர்கள் இந்த தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறித்தும் 2023 ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய வீரர்கள் குறித்தும் அதற்கான காரணம் என்னவென்பது குறித்தும் கிரிக்கெட் வல்லுனர்கள் ஆராய்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்

சர்துல் தாகூர் சொதப்பலுக்கு கொல்கத்தா அணிதான் காரணம்…

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா., சர்துல் தாகூரின் மோசமான ஆட்டத்திற்கு காரணம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை சரியாக பயன்படுத்தாதது தான் என செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா தெரிவித்ததாவது., சார்துல் தாகூர் மூன்றாவது பேட்டிங் ஆர்டரில் களமிறங்கும் போது அவருக்கு அந்த போட்டியில் பந்து வீசுவதற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. ஒரு சில போட்டிகளில் பந்து வீசும் பொழுது அவருக்கு வெறும் ஒரே ஒரு ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது, சில போட்டிகளில் பந்து வீசுவதற்கே வாய்ப்பு கொடுக்கவில்லை. சில போட்டிகளில் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்கிறார் சில போட்டிகளில் வேறு ஆர்டரில் களமிறங்குகிறார். இதை புரிந்து கொள்வதற்கே மிகவும் கடினமாக உள்ளது. சர்துல் தாகூருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதால் அவரை அதிகம் பந்துவீச பயன்படுத்தவில்லை என்றால் அதில் நியாயம் உள்ளது. ஆனால் டெல்லி அணியிடமிருந்து 10 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து அணிக்குத் தேர்ந்தெடுத்து ஒரு வீரரை இப்படி பயன்படுத்தாமல் இருப்பது வினோதமாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி விக்கெட்டை எடுக்கும் திறமையும் உள்ள ஒரு வீரரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சரியாக பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை” என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருந்தார்.

ஐபிஎல் தொடரின் மேட்ச் வின்னராக அறியப்பட்ட சர்துல் தாகூரை 2023 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பத்து கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்த கொல்கத்தா அணி அவரை அனைத்து போட்டிகளிலும் பயன்படுத்தியது. ஆனால் சர்துல் தாகூர் 14 போட்டிகளில் பங்கேற்று வெறும் 7 விக்கெட்களை மட்டுமே வீழ்த்தியுள்ளார் .

Mohamed Ashique:

This website uses cookies.