இந்த வித்தைய எல்லாம் நான் கத்துக்கிட்டதே தலைவன் தோனி கிட்ட தான்; மொய்ன் அலி ஓபன் டாக் !!

இந்த வித்தைய எல்லாம் நான் கத்துக்கிட்டதே தலைவன் தோனி கிட்ட தான்; மொய்ன் அலி ஓபன் டாக்

தனக்கு கேப்டன் பதவியை பற்றி கற்றுக் கொடுத்ததே மகேந்திர சிங் தோனி தான் என்று சார்ஜா வாரியர்ஸ் அணியின் கேப்டன் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் மொயின் அலி, அன்றிலிருந்து இன்று வரை சென்னையின் முக்கிய அங்கமாக செயல்பட்டு வருகிறார்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய திறமை படைத்த இவர், தான் சென்னை அணியில் தேர்ந்வானதற்கு பிறகு தான் கிரிக்கெட்டை அணுகும் விதமே மாறிவிட்டது என்று பலமுறை பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் யுனைட்டட் அராப் எமிரேட்சில் நடைபெறும் இன்டர்நேஷனல் லீக் போட்டியில் சார்ஜா வாரியர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் மொயின் அலி, சென்னை அணியில் இருந்தால் அதிகம் கற்றுக் கொள்ளலாம் என்றும் தனக்கு கேப்டன் பதவியை பற்றி புரிய வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து மொயின் அலி பேசுகையில்,“நான் சில நேரங்களில் மகேந்திர சிங் தோனியுடன் அதிகமாக உரையாடுவேன்,அப்பொழுது நான் அவரிடம் கேப்டன்ஷியை பற்றி கேட்பேன் அவரும் எனக்கு பதில் அளிப்பார், மற்றவர்கள் போல் எந்த ஒரு பாவலாவும் காட்டாமல் வெளிப்படையாக பேசுவார். ஒரு கேப்டனாக நான் அவரிடம் இருந்து அதிகம் கற்றுக் கொண்டேன். மேலும் பேட்டிங்கிலும் அதிகம் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். சென்னை அணியிலிருந்து நாம் அதிகமாகவே கற்றுக் கொள்ளலாம்”.

“மற்ற அணிகளைப் பற்றி எனக்கு தெரியவில்லை ஆனால் சென்னை அணி எப்போதுமே குடும்ப அணி போன்றது தான் மேலும் எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்காக நான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன், நடந்து முடிந்த ஏலம் சென்னை அணிக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. அணியில் தேர்வான புதுமுக வீரர்களுடன் விளையாடுவதற்கு ஆவலாக உள்ளேன். மேலும் சேப்பாக் மைதானத்தில் சென்னை ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதை மிகப்பெரிய விஷயமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என மொயின் அலி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.