கோடி கோடியா கொடுத்தும் பிரயோஜனம் இல்லையே… உங்களால் கண்டிப்பா சாம்பியனாக முடியாது; டிவில்லியர்ஸ் அதிரடி பேச்சு
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கில் பலவீனமான அணியாக உள்ளது என முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
17வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
மொத்தம் 333 வீரர்கள் பங்குபெற்ற இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து கொண்டன.
மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்கை 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தது. கொல்கத்தா அணி மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட வீரர்களை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்திருந்தாலும், கொல்கத்தா அணியால் இந்த முறையும் கோப்பையை வெல்ல முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
குறித்து ஏ.பி டிவில்லியர்ஸ் பேசுகையில், “கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு யூனிட் பலமாக உள்ளது. பந்துவீச்சில் இருக்கும் பலம் கொல்கத்தா அணியின் பேட்டிங்கில் இல்லை என்றே நான் கருதுகிறேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் திறமையானவர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனால் இந்த பேட்டிங் ஆர்டரை வைத்து கொண்டு கொல்கத்தா அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியுமா என்றால் அது சந்தேகம் தான். கொல்கத்தா அணியின் பேட்டிங் ஆர்டர் மிக மோசமானது இல்லை என்றாலும், அவர்களால் நிச்சயம் டாப் 4 இடங்களுக்குள் வர முடியாது என்பதே எனது கருத்து. பேட்டிங் ஆர்டரே கொல்கத்தா அணியின் பலவீனமாக நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.