மொத்தமாக விலகிய டீவன் கான்வே… முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த தரமான பந்துவீச்சாளரை தட்டி தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

மொத்தமாக விலகிய டீவன் கான்வே… முதல் போட்டியிலேயே சம்பவம் செய்த தரமான பந்துவீச்சாளரை தட்டி தூக்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்

காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நட்சத்திர வீரரான டீவன் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சென்னை அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராகவும் மாறிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான டீவன் கான்வே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்தார்.

இடது கை விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவதிப்பட்டு வரும் டீவன் கான்வே மே மாத துவக்கத்தில் காயத்தில் இருந்து குணமடைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டீவன் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டீவன் கான்வே நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதை அறிவித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை சேர்ந்த ரிச்சர்ட் க்ளீசன் என்னும் பந்துவீச்சாளரை மாற்று வீரராகவும் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக இதுவரை 6 டி.20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிச்சர்ட் அதில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். உள்ளூர் டி.20 போட்டிகளில் 90 போட்டிகளில் விளையாடி அதில் 101 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கும் ரிச்சர்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரது அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கே தனது அணியில் எடுத்துள்ளது. ரிச்சர்ட் கிளாசன் தனது முதல் போட்டியான இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் விக்கெட்டை கைப்பற்றி சர்வதேச கிரிக்கெட் உலகின் கவனத்தை பெற்றவர் என்பது கூடுதல் தகவல்.

நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் முஸ்தபிசுர் ரஹ்மான் அடுத்த சில தினங்களில் நாடு திரும்ப இருக்கும் நிலையில், அவரது இடத்தை சரி செய்வதற்காவே சென்னை அணி ரிச்சர்டை எடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் முஸ்தபிசுர் ரஹ்மான் சென்றாலும் சென்னை அணிக்கு பெரிய பின்னடைவு எதுவும் ஏற்படாது என்றே தெரிகிறது.

 

Mohamed:

This website uses cookies.