தனி ஒருவன் நான்… இறுதி வரை தனி ஆளாக போராடி சதமும் அடித்த கிங் கோலி; 183 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி !!

கோலி

தனி ஒருவன் நான்… இறுதி வரை தனி ஆளாக போராடி சதமும் அடித்த கிங் கோலி; 183 ரன்கள் எடுத்தது பெங்களூர் அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றன.

ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி – டூபிளசிஸ் ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

கடந்த போட்டிகளில் சொதப்பிய டூபிளசிஸ் இந்த போட்டியில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி 44 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் களமிறங்கிய மேக்ஸ்வெல் 3 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டும் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய சவுரவ் சவுஹான் 6 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார்.

மற்ற வீரர்கள் சொதப்பினாலும், கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் தனி ஆளாக போராடிய விராட் கோலி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி அணியின் தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தார்.

இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி ஐபிஎல் தொடரில் தனது 8வது சதத்தையும் பதிவு செய்தார். விராட் கோலி கடைசி வரை களத்தில் இருந்தாலும் கடைசி ஓவர்களில் பெரிதாக ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்துள்ள பெங்களூர் அணி 183 ரன்கள் எடுத்துள்ளது.

பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக யுஸ்வேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போன்று பார்கர் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.

 

Mohamed:

This website uses cookies.