மீண்டும் களமிறங்கும் இரண்டு மிக முக்கியமான வீரர்கள்; கொல்கத்தாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது ராஜஸ்தான்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணியுடனான இந்த போட்டிக்கான ராஜஸ்தான் அணியின் ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அஸ்வின் மற்றும் பட்லர் ஆகியோர் மீண்டும் ஆடும் லெவனிற்கு திரும்பியுள்ளனர்.
தொடர் வெற்றிகளை பெற்று வரும் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே ராஜஸ்தான் அணியுடனான போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆடும் லெவன்;
பிலிப் சால்ட், சுனில் நரைன், ரகுவான்சி, ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரியூ ரசல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்திக், ஹர்சித் ராணா.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவன்;
யசஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பிராக், துருவ் ஜூரல், சிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திர அஸ்வின், டிரண்ட் பவுல்ட், ஆவேஸ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சாஹல்.