நான் பதுங்குனதே பாயுறதுக்கு தாண்டா… தனி ஆளாக கொல்கத்தாவை கதறவிட்ட ஜாஸ் பட்லர்; ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி !!

நான் பதுங்குனதே பாயுறதுக்கு தாண்டா… தனி ஆளாக கொல்கத்தாவை கதறவிட்ட ஜாஸ் பட்லர்; ராஜஸ்தான் மிரட்டல் வெற்றி !!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 31வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை மேற்கொண்டன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சுனில் நரைன் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 223 ரன்கள் குவித்தது.

பந்துவீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஆவேஸ் கான் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு அந்த அணியின் இளம் துவக்க வீரரான ஜெய்ஸ்வால் 19 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த சஞ்சு சாம்சன் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்ததாக களத்திற்கு வந்த ரியான் பிராக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் ரோவ்மன் பவலை (26) தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினாலும், மறுமுனையில் தனி ஆளாக ஜாஸ் பட்லர் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்து தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தார்.

கொல்கத்தா  பந்துவீச்சாளர்களின் அனைத்து வியூகங்களையும் ஜாஸ் பட்லர் அசால்டாக அடித்து நொறுக்கியதன் மூலம், ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. போட்டியின் 19வது ஓவரில் 2 சிக்ஸர் மற்றும் 1 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை ராஜஸ்தான் அணி சந்தித்தது.

வருண் சக்கரவர்த்தி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய ஜாஸ் பட்லர் கடைசி பந்தில் ராஜஸ்தான் அணிக்கு மிரட்டல் வெற்றியையும் பெற்று கொடுத்தார். ஜாஸ் பட்லர் 60 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 107* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியை பதிவு செய்தது.

 

Mohamed:

This website uses cookies.