தனி ஆளாக மும்பையை அலறவிட்ட அசுதோஷ் சர்மா… ஒரே ஓவரில் மாறிய போட்டி; மும்பையிடம் போராடி தோற்றது பஞ்சாப் !!

தனி ஆளாக மும்பை அலறவிட்ட அசுதோஷ் சர்மா… ஒரே ஓவரில் மாறிய போட்டி; மும்பையிடம் போராடி தோற்றது பஞ்சாப்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 33வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

சண்டீகரீல் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 78 ரன்களும், ரோஹித் சர்மா 38 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பமே சரியாக அமையவில்லை. அந்த அணியின் முதல் நான்கு வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர், இதன் மூலம் பஞ்சாப் அணி 49 ரன்களுக்கு தனது 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

முதல் 5 விக்கெட்டுகளை மிக இலகுவாக கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் அசால்டாக வெற்றி பெறும் என கருதப்பட்ட நிலையில், களத்திற்கு வந்த ஷாசாங் சிங் 25 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து மும்பை வீரர்கள் சிறிய அழுத்தத்தை ஏற்படுத்தினார். அதே போன்று கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் நம்ப முடியாத அளவிற்கு தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அசுதோஷ் சர்மா தனது அசாத்தியமான சில ஷாட்கள் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்து தெரிந்தார்.

23 பந்துகளில் அசுத்தோஷ் சர்மா சதம் அடித்ததன் மூலம் கடைசி 24 பந்துகளில் 28 ரன்கள்  எடுத்தால் வெற்றி என்ற இலகுவான நிலைக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வந்தது. போட்டியின் 18வது ஓவரை வீசிய கேரால்ட் கோட்ஸி முதல் பந்திலேயே அசுதோஷ் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றி போட்டியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி நேரத்தில் பஞ்சாப் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த ஹர்ப்ரீட் பிராரும் 19வது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து பஞ்சாப் ரசிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்த ரபாடா கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் ஓட முயற்சித்து விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டது.

பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக பும்ராஹ் மற்றும் கெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

Mohamed:

This website uses cookies.