கிளன் மேக்ஸ்வெல் இல்லை… பெங்களூர் அணியில் மூன்று அதிரடி மாற்றம்; கொல்கத்தாவிற்கு எதிராக பயம் இல்லாமல் பந்துவீச்சை தேர்வு செய்தார் டூபிளசிஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 36வது போட்டியில் பெங்களூர் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள பெங்களூர் அணியின் கேப்டன் டூபிளசிஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
கொல்கத்தா அணியுடனான போட்டிக்கான பெங்களூர் அணியின் ஆடும் லெவனில் மூன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கிளன் மேக்ஸ்வெல் இந்த போட்டியிலும் விளையாடவில்லை. கேமிரான் க்ரீன், முகமது சிராஜ் மற்றும் கரண் சர்மா ஆகியோர் மீண்டும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
கொல்கத்தா அணி தனது ஆடும் லெவனில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே பெங்களூர் அணியுடனான போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆடும் லெவன்;
டூபிளசிஸ், விராட் கோலி, வில் ஜாக்ஸ், ராஜத் படித்தர், கேமிரான் க்ரீன், தினேஷ் கார்த்திக், மஹிபால் லம்ரோர், கரண் சர்மா, லோகி பெர்குசன், யஸ் தயால், முகமது சிராஜ்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆடும் லெவன்;
பிலிப் சால்ட், சுனில் நரைன், ரகுவான்சி, ஸ்ரேயஸ் ஐயர், ஆண்ட்ரியூ ரசல், ரிங்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா.