ஆடும் லெவனில் மூன்று அதிரடி மாற்றம்… ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ் !!

ஆடும் லெவனில் மூன்று அதிரடி மாற்றம்… ராஜஸ்தான் ராயல்ஸிற்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது மும்பை இந்தியன்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

ஜெய்ப்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் மூன்று அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவனில் பியூஸ் சாவ்லா, நெஹல் வதேரா மற்றும் நுவான் ஆகியோர் அணியில்  சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது ஆடும் லெவனில் ஒரு மாற்றம் செய்துள்ளது. குல்தீப் சென் ஆடும் லெவனில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சந்தீப் சர்மா மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆடும் லெவன்; 

இஷான் கிஷன், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், நெஹல் வதேரா, முகமது நபி, கெரால்ட் கோட்சி, பியூஸ் சாவ்லா, ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆடும் லெவன்; 

யசஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ரியான் பிராக், துருவ் ஜூரல், சிம்ரன் ஹெட்மயர், ரோவ்மன் பவல், ரவிச்சந்திர அஸ்வின், டிரண்ட் பவுட்ல், ஆவேஸ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

Mohamed:

This website uses cookies.