இது எல்லாம் அசால்டுடா… அடித்து துவம்சம் செய்த யசஸ்வி ஜெய்ஸ்வால்; மும்பை  இந்தியன்ஸ் படுதோல்வி !!

இது எல்லாம் அசால்டுடா… அடித்து துவம்சம் செய்த யசஸ்வி ஜெய்ஸ்வால்; மும்பை  இந்தியன்ஸ் படுதோல்வி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 38வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை  இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

கெத்தாக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணியால் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்க முடியவில்லை. திலக் வர்மா (65) மற்றும் நேஹல் வதேரா (49) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்களில் ஒருவர் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளையும், டிரண்ட் பவுல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அந்த அணியின் ஒரு துவக்க வீரரான ஜாஸ் பட்லர் 35 ரன்கள் எடுத்து கொடுத்தார். இதன்பின் கூட்டணி சேர்ந்த ஜெய்ஸ்வால் – சஞ்சு சாம்சன் ஜோடி, மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை அசால்டாக துவம்சம் செய்து தேவைக்கு ஏற்ப ரன்னும் சேர்த்தது.

59 பந்துகளில் சதம் அடித்து அசத்திய ஜெய்ஸ்வால் இறுதி வரை விக்கெட்டை இழக்காமல் 60 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 104* ரன்களும், பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 28 பந்துகளில் 38* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.4 ஓவரில் இலக்கை இலகுவாக எட்டிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.

Mohamed:

This website uses cookies.