தனி ஆளாக சென்னை அணிக்கு தண்ணி காட்டிய ஸ்டோய்னிஸ்… 6 பந்துகளில் எடுக்க வேண்டிய ரன்னை 3 பந்துகளில் வாரி வாரி வழங்கிய முஸ்தபிசுர்; லக்னோ மிரட்டல் வெற்றி !!

தனி ஆளாக சென்னை அணிக்கு தண்ணி காட்டிய ஸ்டோய்னிஸ்… 6 பந்துகளில் எடுக்க வேண்டிய ரன்னை 3 பந்துகளில் வாரி வாரி வழங்கிய முஸ்தபிசுர்; லக்னோ மிரட்டல் வெற்றி

17வது ஐபிஎல் தொடரின் 39வது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருத்துராஜ் கெய்க்வாட் 108* ரன்களும், சிவம் துபே 66 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 210 ரன்கள் குவித்தது.

இதன்பின் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணிக்கு அந்த அணியின் டி காக் (0) மற்றும் கே.எல் ராகுல் (16) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி லக்னோ அணியை சரிவில் இருந்து மீட்டார்.

தேவ்தத் படிக்கல் 13 ரன்னிலும், அடுத்ததாக களத்திற்கு வந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரண் 15 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தாலும், மார்கஸ் ஸ்டோய்னிஸின் தரமான பேட்டிங்கின் மூலம் கடைசி 2 ஓவரில் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை லக்னோ அணி சந்தித்தது.

பதிரானா வீசிய போட்டியின் 19வது ஓவரையும் மிக சிறப்பாக கையாண்ட ஸ்டோய்னிஸ் – தீபக் ஹூடா ஜோடி, 19வது ஓவரில் 15 ரன்கள் எடுத்ததன் மூலம் கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையை லக்னோ அணி அடைந்தது.

கடைசி ஓவரை வீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் லக்னோ அணி 6 பந்துகளில் எடுக்க வேண்டிய ரன்களை வெறும் 3 பந்துகளிலேயே இலகுவாக கொடுத்ததன் மூலம் இலக்கை அசால்டாக எட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது. ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124* ரன்களும், தீபக் ஹூடா 6 பந்துகளில் 17* ரன்களும் எடுத்து லக்னோ அணிக்கு தரமான வெற்றியை பெற்று கொடுத்தனர்.

Mohamed:

This website uses cookies.