தீ இது தளபதி… கதாநாயகனாக மாறிய ரவீந்திர ஜடேஜா.. சிம்ரஜித் சிங் அபாரம்; சென்னை சூப்பர் கிங்ஸ் மிரட்டல் வெற்றி !!

தீ இது தளபதி… கதாநாயகனாக மாறிய ரவீந்திர ஜடேஜா.. சிம்ரஜித் சிங் அபாரம்; சென்னை சூப்பர் கிங்ஸ் மிரட்டல் வெற்றி !!

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 53வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

தர்மசாலா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 43 ரன்களும், ருத்துராஜ் கெய்க்வாட் 32 ரன்களும் எடுத்தனர்.

பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்சல் பட்டேல் மற்றும் ராகுல் சாஹர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்பின் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி கடந்த போட்டிகளை போன்று இல்லாமல் இந்த போட்டியில் பேட்டிங்கில் கடுமையாக திணறியது.

பிரப்சிம்ரன் சிங் (30) மற்றும் சாஷன்க் சிங் (27) ஆகிய இருவரை தவிர பஞ்சாப் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் சிம்ரஜித் சிங், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட சென்னை வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

 

கடைசி நேரத்தில் ராகுல் சாஹர் (16), ஹர்ப்ரீத் பிரார் (17) மற்றும் ஹர்சல் பட்டேல் (10) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் படுதோல்வியில் இருந்தும் ஆல் அவுட்டாதிலும் இருந்தும் தப்பித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். துசார் தேஸ்பாண்டே மற்றும் சிம்ரஜித் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

Mohamed:

This website uses cookies.