ஒரு வழியாக டாஸை வென்ற ருத்துராஜ் கெய்க்வாட்… ரச்சின் ரீ எண்ட்ரீ; பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் !!

ஒரு வழியாக டாஸை வென்ற ருத்துராஜ் கெய்க்வாட்… ரச்சின் ரீ எண்ட்ரீ; பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

17வது ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

குஜராத் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரச்சின் ரவீந்திரா மீண்டும் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய சிமர்ஜித் சிங்கும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

அதே போன்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆடும் லெவனிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. விர்திமான் சஹாவிற்கு பதிலாக மேத்யூ வேடும், ஜோசுவா லிட்டிற்கு பதிலாக கார்த்திக் தியாகியும் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆடும் லெவன்; 

ருத்துராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டேரியல் மிட்செல், சிவம் துபே, மொய்ன் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி, மிட்செல் சாட்னர், ஷர்துல் தாகூர், துசார் தேஸ்பாண்டே, சிமர்ஜித் சிங்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆடும் லெவன்; 

சுப்மன் கில், சாய் சுதர்சன், ஷாருக் கான், டேவிட் மில்லர், மேத்யூ வேட், ராகுல் திவாடியா, ரசீத் கான், நூர் முகமது, உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, கார்த்திக் தியாகி.

Mohamed:

This website uses cookies.