கொல்கத்தா vs ஹைதராபாத் குவாலிபயர் 1; டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் பாட் கம்மின்ஸ் !!

கொல்கத்தா vs ஹைதராபாத் குவாலிபயர் 1; டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் பாட் கம்மின்ஸ்

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபயர் போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

17வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஹைதராபாத் இடையேயான முதல் குவாலிபயர் போட்டி இன்று நடைபெறுகிறது.

அஹமதாபாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளுமே தங்களது கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதால், இரு அணிகளுமே தங்களது ஆடும் லெவனில் எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

முதல் குவாலிபயர் போட்டிக்கான கொல்கத்தா அணியின் ஆடும் லெவன்; 

ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரியூ ரசல், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்சித் ரானா, வருண் சக்கரவர்த்தி.

முதல் குவாலிபயர் போட்டிக்கான ஹைதராபாத் அணியின் ஆடும் லெவன்; 

ட்ராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன், அப்துல் சமத், சபாஷ் அஹமத், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், விஜய்காந்த், நடராஜன்.

 

Mohamed:

This website uses cookies.