நாங்க 20 கோடி கொடுத்ததே இதுக்கு தான்… 2 கோப்பை வென்று கொடுத்த மார்கரமின் கேப்டன் பதவி பறிப்பு; பாட் கம்மின்ஸ் புதிய கேப்டன் !!

நாங்க 20 கோடி கொடுத்ததே இதுக்கு தான்… 2 கோப்பை வென்று கொடுத்த மார்கரமின் கேப்டன் பதவி பறிப்பு; பாட் கம்மின்ஸ் புதிய கேப்டன்

எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய அணியின் உலகக்கோப்பை நாயகனான பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் மார்ச் 22ம் தேதி துவங்க உள்ளது.

இந்த வருட பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் எஞ்சிய போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியாகும் என தெரிகிறது.

ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் துவங்கிவிட்ட நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான ஹைதராபாத் அணி, தனது அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸை நியமித்துள்ளது.

தென் ஆப்ரிக்காவின் மார்கரம் தலைமையில் கடந்த தொடரை எதிர்கொண்ட ஹைதராபாத் அணிக்கு, முந்தைய தொடர்களை போலவே கடந்த தொடரும் சரியாக அமையவில்லை. இதன் காரணமாகவே ஆஸ்திரேலியாவிற்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த பாட் கம்மின்ஸிற்காக ஏலத்தில் கோடிகளை கொட்டிய ஹைதராபாத் அணி, தற்போது அவரையே தனது அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது.

ஐபிஎல் தொடரை போலவே தென் ஆப்ரிக்காவில் நடத்தப்படும் டி.20 தொடரில் ஹைதராபாத் அணிக்காக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த மார்கரம் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ஹைதராபாத் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அணி மார்ச் 23ம் தேதி நடைபெற இருக்கும் தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி;

பாட் கம்மின்ஸ், மார்கரம், அப்துல் சமத், ராகுல் திரிபாதி, கிளன் பிலிப்ஸ், மாயன்க் அகர்வால், ஹென்ரிச் கிளாசன், அன்மோல்ப்ரீட் சிங், உபேந்திர சிங் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, டர்வீஸ் ஹெட், அபிசேக் சர்மா, மார்கோ ஜென்சன், வாசிங்டன் சுந்தர், சன்வீர் சிங், ஹசரங்கா, சுப்ரமணியன், ஆகாஷ் சிங், சபாஷ் அஹமத், புவனேஷ்வர் குமார், ஃபாரூகீ, ஜெயதேவ் உனாத்கட், நடராஜன், உம்ரன் மாலிக், மாயன்க் மார்கண்டே.

Mohamed:

This website uses cookies.