ஐ.பி.எல் தொடர்… வேறு அணிக்கு மாறியதால் மோசமாக சொதப்பிய ஐந்து வீரர்கள் !!

Prev1 of 2
Use your ← → (arrow) keys to browse
கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் ரசிகர் படையை பெற்றுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு நடக்குமா இல்லையா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
ஏலத்தின் மூலமே வீரர்கள் தேர்வு செய்யப்படும் முறையை கொண்ட ஐ.பி.எல் தொடரில் எந்த ஒரு வீரரும் அந்த அணிக்காகவே நிரந்தரமாக விளையாட முடியாது.

இதனால் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ சில வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு விடப்படுவார்கள்.

அந்த வகையில் ஒரு தொடரில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் அடுத்த தொடரில் வேறு அணிக்காக மாறியதும் வெளுத்து வாங்கி முக்கிய வீரர்களாக ஐந்து கிரிக்கெட் வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
அணி மாற்றத்தால் 5 வீரர்களுக்கு ஏற்பட்ட மாற்றம்..
 மைக்கல் ஹசி….
ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்த மைக்கெல் ஹசிக்கு இந்தியாவிலும் ஒரு ரசிகர் படையே உள்ளது என்றால் அது மிகையல்ல.

தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் இடம்பிடித்த மைக்கெல் ஹசி, சென்னை அணியின் துவக்க வீரராக களமிறங்கி சென்னை அணியின் பல வெற்றிகளில் மிக முக்கிய பங்காக திகழ்ந்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மைக்கெல் ஹசியை, கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தின் போது மும்பை இந்தியன்ஸ் அணி தனது அணியில் ஏலத்தில் எடுத்தது.

சென்னை அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்த மைக்கெல் ஹசியால், மும்பை அணியில் ஜொலிக்க முடியவில்லை மும்பை அணிக்காக மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய ஹசி அதில் மொத்தம் 209 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இந்த தொடரே மைக்கெல் ஹசியின் கடைசி ஐ.பி.எல் தொடராகவும் அமைந்தது. அதன்பிறகு ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற ஹசி தற்பொழுது சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

 

கௌதம் கம்பீர்.

IPL போட்டியில் தனது அணிக்காக இரண்டு கோப்பைகளை பெற்று தந்த கேப்டன் கௌதம் கம்பீர். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக 2011 முதல் செயல்பட்டார்.
தன் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். லெப்ட் ஹேன்ட் பேட்ஸ்மேனான கௌதம் கம்பீர் ஒரு ஆக்ரோஷமான கேப்டனும் ஆவார்.

கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த கவுதம் கம்பீரை கடந்த 2018ம் ஆண்டுக்கான தொடரின் ஏலத்தின் போது டெல்லி டேர்டெவில்ஸ் அணி கவுதம் கம்பீரை தனது அணியில் எடுத்து அவருக்கு கேப்டன் பதவியையும் கொடுத்தது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய அனைத்து போட்டிகளிலும் சொதப்பிய கம்பீர், தானாக முன்வந்து தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். பின்பு ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டு தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராகவும், எம்.பியாகவும் உள்ளார்.

சேன் வாட்சன்;

ஐ.பி.எல் துவங்கிய 2008ம் ஆண்டில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சேன் வாட்சனை கடந்த 2016ம் ஆண்டு பெங்களூர் அணி தனது அணியில் இணைத்து கொண்டது.

ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் போது மாஸ் காட்டிய சேன் வாட்சன், பெங்களூர் அணிக்காக விளையாடும் போது சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. இதனால் அணியில் இருந்து கைவிடப்பட்ட சேன் வாட்சனை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது அணியில் இணைத்து கொண்டது. தற்பொழுது சென்னை அணியின் மிக முக்கிய வீரராக திகழும் அளவிற்கு சேன் வாட்சன் ஒவ்வொரு போட்டியிலும் காட்டடி அடித்து வருகிறார்.
Jos butler
2015இல் உலகக் கோப்பை தோல்விக்கு பின் ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் ஒரு முக்கியமான வீரராக திகழ்ந்தார். ஆறாவது பேட்ஸ்மேனாக களமிறங்கும் ஜோஸ் பட்லர் தனது அணியின் போக்கையே மாற்றியமைப்பதில் வல்லவர். இவரின் சிறப்பான பேட்டிங் பவுலரையும் கவனத்துக்கு உள்ளாக்கியது.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் மும்பை அணிக்காக 2016 மற்றும் 2017 விளையாடினார். ஆனால் அவரால் அந்த அணிக்காக சிறப்பாக செயல்பட முடியவில்லை (ஆவரேஜ் 23.18 மற்றும் 27.20.)
பின் அடுத்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார் அதில் ஒற்றை நபராக அந்த அணியியை பிளே ஆப் சுற்று கொண்டு சென்றார். அந்த சீசனில் 15 போட்டிகளில் பங்கேற்று 548 ரன்கள் தனது அணிக்காக எடுத்தார். (ஆவரேஜ் 55). இரண்டு சீசனில் விளையாடி ராஜஸ்தான் அணிக்காக 859 ரன்கள் எடுத்தார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 150.
கிளன் மேக்ஸ்வெல்;

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான இவர் ஐ.பி.எல் தொடரிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறார்.

2013 இல் அதிகபட்சமாக 5.3 கோடி ஏலத்திற்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெயர் போனவர் ஆனால் அந்த சீசனில் ஒழுங்காக செயல்பட முடியவில்லை மூன்று போட்டிகளில் பங்கெடுத்து 36 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதற்கு அடுத்த சீசனில் 2014 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடி 552 ரன்கள் எடுத்து தன் திறமையை நிரூபித்தார் . அதில் இவரின் சிறப்பான முயற்சி ஆர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சில ஆட்டங்களில் வெற்றி பெற்றது.
Prev1 of 2
Use your ← → (arrow) keys to browse

Mohamed:

This website uses cookies.