ஐ.பி.எல் ஏலம் 2019; அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள்
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.பி.எல் தொடரின் அடுத்த சீசன் அடுத்த ஆண்டு மே மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.
இந்த ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்க்ள் குறித்து இங்கு பார்ப்போம்.
10; முகமது ஷமி – 4.8 கோடி
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமியை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4.8 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
9; பிரபிசிம்ரன் சிங் – 4.8 கோடி
இளம் வீரரான பிரபிசிம்ரன் சிங்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4.8 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
8; சிவம் டூபே – 5 கோடி
முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து மாஸ் காட்டி வரும் இளம் வீரர் சிவம் டூபேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
7;கார்லஸ் பிராத்வொய்ட் – 5 கோடி
விண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கார்லஸ் பிராதவொய்ட்டை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து எடுத்துள்ளது.
6; மோஹித் சர்மா – 5 கோடி
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
5; அக்ஷர் பட்டேல் – 5 கோடி
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான ஆல் ரவுண்டர் அக்ஷர் பட்டேலை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 கோடி ரூபாய் கொடுத்து எடுத்துள்ளது.
4; காலின் இன்கிராம் – 6.4 கோடி
தென் ஆப்ரிக்காவை சேர்ந்த காலின் இன்கிராமை 6.4 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
3; சாம் குர்ரேன் – 7.2 கோடி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் வீரரான சாம் குர்ரேனை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7.2 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
2; ஜெயதேவ் உனாட்கட் – 8.4 கோடி
வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டை இந்த முறையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.
1; வருண் சக்கரவர்த்தி – 8.4 கோடி
தமிழகத்தை சேர்ந்த இளம் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8.4 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.