சென்னை மட்டும் இல்லை… கேன் வில்லியம்சனிற்காக குறி வைத்து காத்திருக்கும் மூன்று அணிகள் இது தான்
கேன் வில்லியம்சனை தட்டி தூக்க காத்திருக்கும் மூன்று அணிகள்..
சன்ரைஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்ட கேன் வில்லியம்சன் 2022 ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை என்பதால் அந்த அணி அவரை விடுவித்தது.
மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்யும் திறமை படைத்த இவர் அணியை வழிநடத்துவதிலும் சிறந்து விளங்குவதால், இவரை எதிர்வரும் 2023 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் அதிக தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் கேன் வில்லியம்சனை டார்கெட் செய்திருக்கும் மூன்று அணிகள் குறித்து இங்கு காண்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்.
சுரேஷ் ரெய்னா அணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு சென்னை அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் கேள்விக்குறியாகவே உள்ளது, மேலும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி 2023 ஐபிஎல் தொடருக்கு பின் ஓய்வு அறிவித்து விடுவார் என்பதால் அவருக்கு பதில் ஒரு நல்ல கேப்டனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டத்தில் சென்னை அணி தள்ளப்பட்டுள்ளது.
மேற்கூறப்பட்ட இரண்டு காரணங்களுக்கும் பொருத்தமான வீரராக கேன் வில்லியம்சன் இருப்பதால் இவரை சென்னை அணி எப்படியாவது தனது அணியில் இணைத்து விட வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.