இஷ்டத்துக்கு பேசாதீங்கடா…. நாங்க கொடுத்த காசுக்கு மிட்செல் ஸ்டார்க் வொர்த் தான்; கவுதம் கம்பீர் அதிரடி !!

இஷ்டத்துக்கு பேசாதீங்கடா…. நாங்க கொடுத்த காசுக்கு மிட்செல் ஸ்டார்க் வொர்த் தான்; கவுதம் கம்பீர் அதிரடி

ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்கை 24.75 கோடி ரூபாய்க்கு எடுத்ததில் எந்த தவறும் இல்லை என கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

17வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. வழக்கம் போல் இந்த தொடரிலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வீரர்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு கடுமையான போட்டி நிலவியது.

பாட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை ஏலத்தில் எடுக்க பல அணிகளும் ஆர்வம் காட்டியதால் அவர்களது விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. இறுதியில் பாட் கம்மின்ஸை 20.5 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியும், மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தது.

இதுவரை ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவமே கொடுக்காத மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கு தகுதியானவரே இல்லை, கொல்கத்தா அணியின் இந்த முடிவு தவறானது என கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கொல்கத்தா அணியை கிண்டலடித்து வரும் நிலையில், கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், மிட்செல் ஸ்டார்கிற்கு 24.75 கோடி ரூபாய் கொடுத்ததை நியாயப்படுத்தி பேசியுள்ளார்.

இது குறித்து கவுதம் கம்பீர், “மிட்செல் ஸ்டார்க் போட்டியில் அசால்டாக திருப்புமுனையை ஏற்படுத்த கூடியவர், இதில் எந்த சந்தேகமும் இல்லை. மிட்செல் ஸ்டார்கால் புதிய பந்திலும் சிறப்பாக செயல்பட முடியும், கடைசி நேரத்திலும் சிறப்பாக செயல்பட முடியும். அதே போன்று அவரால் எங்கள் அணியின் பந்துவீச்சு யுனிட்டை வழிநடத்தும் முடியும். மிட்செல் ஸ்டார்க் இருப்பதன் மூலம் இளம் வீரர்களுக்கு புதிய நம்பிக்கையும், பயிற்சியும் கிடைக்கும். அவரிடம் இருந்து இளம் பந்துவீச்சாளர்கள் நிறைய விசயங்களை கற்றுக்கொள்ளலாம். 24.75 கோடி ரூபாய்க்கு மிட்செல் ஸ்டார்க் தகுதியானவர் தான்” என்று தெரிவித்தார்.

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா அணி; 

நித்திஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மத்துல்லாஹ் குர்பாஷ், ஸ்ரேயஸ் ஐயர், ஜேசன் ராய், சுனில் நரைன், சுயாஸ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரியூ ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்சித் ராணா, வைபவ் ஆரோரா, வருண் சக்கரவர்த்தி, கே.எஸ் பாரத், சேத்தன் சக்காரியா, மிட்செல் ஸ்டார்க், ரகுவான்சி, ரமன்தீப் சிங், ரூத்தர்போர்ட், மணிஷ் பாண்டே, முஜிபுர் ரஹ்மான், அட்கின்சன், ஷாகில் ஹூசைன்.

Mohamed:

This website uses cookies.