வரலாறுகளை மாற்றி எழுதிய பாட் கம்மின்ஸ்… மல்லுக்கட்டி பார்த்த பெங்களூர் அணி; கோடிகளை கொட்டி தட்டி தூக்கியது ஹைதராபாத் அணி !!

வரலாறுகளை மாற்றி எழுதிய பாட் கம்மின்ஸ்… மல்லுக்கட்டி பார்த்த பெங்களூர் அணி; கோடிகளை கொட்டி தட்டி தூக்கியது ஹைதராபாத் அணி !!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடுமையான போட்டிக்கு பிறகு 20.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

17வது ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது.  இந்த ஏலத்தில் 333 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் இந்த ஏலத்தில் அதிகமான விலைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்பட்டது.

2 கோடி ரூபாயை அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க கடுமையான போட்டி நிலவியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் பின்வாங்கியது.

பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. பாட் கம்மின்ஸின் விலை 20 கோடிக்கு மேல் சென்றதால் பெங்களூர் அணி பின்வாங்கியது, இதன் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.50 கோடி ரூபாய்க்கு பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்துள்ளது.

பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுத்துள்ள சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரையே தனது அணியின் கேப்டனாகவும் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதன் மூலம் பாட் கம்மின்ஸ் ஐபிஎல் வரலாற்றில் 20 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Mohamed:

This website uses cookies.