சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை இளம் இந்திய வீரர்கள் சமாளித்து மீண்டு வர அவர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் துணைபுரிகிறது என்று பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் ஷாஹித் அஃப்ரீடி தெரிவித்துள்ளார்.
“ஐபிஎல் கிரிக்கெட் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியுள்ளது. இந்திய அணியின் புதிய வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் உலகின் தரமான வீரர்களுடனும் எதிராகவும் பெரிய ரசிகர்கள் கூட்டம் முன்பு ஆடிப்பழகி வருவதால் சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை மிகச் சுலபமாகக் கையாண்டு விடுகின்றனர்.
ஐபிஎல் அவர்கள் கிரிக்கெட்டையே மாற்றி விட்டது, பாகிஸ்தான் சூப்பர் லீகும் இப்படி மாற்றம் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். ஏற்கெனவே லீகிலிருந்து சில நல்ல வீரர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
Photo by: Deepak Malik /SPORTZPICS for BCCI
உலகின் டாப் வீரர்களுடன் ஆடியோ, எதிராக ஆடியோ பெரிய ரசிகர்கள் முன்னால் ஆடிப்பழகி விட்டால் சர்வதேச கிரிக்கெட்டின் அழுத்தங்களை எளிதாகக் கையாள முடியும், புதிய இந்திய வீரர்களுக்கு இது நடந்துள்ளது, பாகிஸ்தானிலும் இது நிச்சயம் நடக்கும்” என்று ஷாகித் அஃப்ரீடி தெரிவித்தார்.
இந்தியாவில் ஐபிஎல் செய்யும் மாயத்தை போலவே பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக்கும் செய்து வருவதாக அப்ரிடி கூறியுள்ளார். பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் சூப்பர் லீக் மூலம் பல இளம் திறமைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சர்வதேச அளவிலான முன்னணி வீரர்களுடன் இணைந்து அதிகமான கூட்டத்திற்கிடையில் விளையாடும்போது இளம்வீரர்களின் நெருக்கடிகள் விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு போட்டிகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு முன்னணி வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இருதரப்பிலான போட்டிகள் நடத்தப்படுவது தற்போதைக்கு சாத்தியமில்லை என்று ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.