எங்கள் வீரர்களின் முன்னேற்றத்திற்கு இது தான் முக்கிய காரணம்; நியூசிலாந்து தேர்வாளர் ஓபன் டாக் !!

எங்கள் வீரர்களின் முன்னேற்றத்திற்கு இது தான் முக்கிய காரணம்; நியூசிலாந்து தேர்வாளர் ஓபன் டாக்

நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் மிகப்பெரிய அளவில் உதவியுள்ளதாக, அந்நாட்டு கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர் கவின் லார்சன் தெரிவித்துள்ளார்.

உலகளவில் நடைபெறும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் முதன்மையாக விளங்குவது இந்தியன் பிரிமீயர் லீக். ஐசிசி இதற்கு ஏற்றபடி சர்வதேச கிரிக்கெட் போட்டி அட்டவணையை தயாரிப்பதால் வெளிநாட்டு வீரர்கள் எளிதாக இந்தத் தொடரில் விளையாட முடிகிறது.

MOUNT MAUNGANUI, NEW ZEALAND – FEBRUARY 11: Henry Nicholls of the Black Caps plays the ball away for four runs during game three of the One Day International Series between New Zealand and India at Bay Oval on February 11, 2020 in Mount Maunganui, New Zealand. (Photo by Hannah Peters/Getty Images)

இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்திற்கு ஐபிஎல் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கிறது என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் கவின் லார்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவின் லார்சன் கூறுகையில் ‘‘எங்கள் நாட்டு கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் அணிகள் ஏலத்தில் எடுக்க இருக்கும் என்றால், ஐபிஎல் விண்டோ எங்கள் வீரர்களுக்காக இருக்க வேண்டும். இதுதான் எங்களது முக்கிய நோக்கம். வீரர்களை அணிகள் எடுக்கும்போது அவர்களுடைய ஆட்டத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும். சில வீரர்கள் அவர்களுடைய ஆட்டத்தை மேம்படுத்தியுள்ளதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

Bengaluru: Sunrisers Hyderabad’s Kane Williamson in action during the 54th match of IPL 2019 between Royal Challengers Bangalore and Sunrisers Hyderabad at M.Chinnaswamy Stadium in Bengaluru on May 4, 2019. (Photo: IANS)

அடுத்தடுத்து இரண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருவதால், ஐபிஎல் தொடரில் விளையாடும் நியூசிலாந்து வீரர்களின் ஆட்டத்தை நாங்கள் உன்னிப்பாக கவனிப்போம்’’ என்றார்.

Mohamed:

This website uses cookies.