இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவோடு இதுவரை 12 சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடரானது இந்த மாதம் 19ம் தேதி துவங்க உள்ளது.
கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாததன் காரணமாக துபாயில் வைத்து ஐ.பி.எல் தொடரை நடத்த பி.சி.சி.ஐ., திட்டமிட்டுள்ளது. ஐ.பி.எல் தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக செயல்பட உள்ள ஐந்து பந்துவீச்சாளர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஐபிஎல் போட்டியில் மிகச் சிறந்து விளங்கும் 5 பவுலர்கள்.
#1 ஜஸ்பிரித் பும்ரா(மும்பை இந்தியன்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய அணியை சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் வீரராவார்.
இவரால் பலமுறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இவர் துல்லியமாக யார்க்கர் வீசுவதிலும் ஷாட்பிட்ச் பந்துகள் வீசுவதிலும் சிறந்தவர்.
இருந்தபோதும் இவர் இதுவரை பர்ப்பிள் கேப் வாங்கவில்லை. கடந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றுவதற்கு இவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது.
2019 ஐபிஎல் போட்டித் தொடரில் 19 விக்கெட்டுகளை எடுத்து அதிகமான விக்கெட்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்தார்.
#2 யுவேந்தர் சஹால்(RCB).
ஐபிஎல் போட்டிகளில் பேட்டிங்கில் பலமாக திகழும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பவுலிங்கில் அந்தளவு சிறப்பாக செயல்படுவதில்லை.
இருந்தபோதும் அந்த அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சஹால் இதுவரை சஹால் தனது அணிக்காக பந்துவீசி பல விக்கெட்களையும்,இக்கட்டான நிலையில் ரன்களையும் கட்டுப்படுத்தி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர்கள் வரிசையில் சஹால் மட்டுமே சிறப்பாக செயல்படும் வீரர்.
#3. ரஷித் கான் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்).
தனது லெக் ஸ்பின்னால் அனைத்து பேட்ஸ்மேன்களை தடுமாற செய்பவர். இவருடைய பந்துவீச்சை சமாளிப்பது அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் சவாலாகவே இருக்கும்.
துபாயில் அமீரகத்தில் நடக்கும் 2020 க்கான ஐபிஎல் போட்டித் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ரஷித் கான் தனது பந்துவீச்சால் வெற்றி பெறச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் 14 போட்டிகளில் பங்கேற்று 18 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
#4. புவனேஸ்வர் குமார் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்).
திறமையான பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் SRH அணிக்காக சிறப்பாக பந்துவீசி உள்ளார். தொடர்ந்து இரு முறை அதிகமான விக்கெட்களை எடுத்தால் தரப்படும் நீல நிற தொப்பியை பெற்றுள்ளார்.
இருந்தபோதும் காயம் காரணமாக அவர் சில காலம் ஓய்வில் இருந்தார். இவரின் வருகை அணிக்கு பெரும் பலத்தை சேர்க்கும்.
2020 ஐபிஎல் தொடர் புவனேஷ்வர் குமாருக்கு மீண்டும் தனது பழைய பார்மை நிரூபிப்பதற்கு நல்ல வாய்ப்பாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#5. குல்தீப் யாதவ். (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்).
இடது கை பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த முன்னாள் கேப்டன் தோனியின் கீழ் இருந்து தனது பந்து வீசும் திறமையை வளர்த்துக்கொண்டவர்.
சர்வதேச கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே சுழற்பந்துவீச்சாளர் இவரே, வருகிற 2020 ஐபிஎல் போட்டியில் KKR அணிக்கு இவர் பெரும் உதவியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.