“நான் ஏன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன்..” முன்னணி வீரரின் பதிலால் ரசிகர்கள் கவலை!
ஐபிஎல் தொடரில் விலகியதன் முக்கிய காரணம் இதுதான் என விவரித்துள்ளார் டெல்லி அணிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ்.
இங்கிலாந்து அணிக்கு முன்னணி வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருபவர் கிறிஸ் வோக்ஸ். இவர் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் டெல்லி அணிக்காக 1.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஐபிஎல் தொடர் துவங்க ஒரு மாதகாலம் கூட இல்லாத நிலையில் இவர் திடீரென இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிக்கொள்வதாக கூறியுள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இவரது இந்த முடிவு கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது.
இந்நிலையில், தான் ஏன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுகிறேன் என விளக்கமளித்துள்ளார். அவர் அளித்த பெட்டியில்,
“நான் ஐபிஎல் தொடரை மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். ஆனால், இங்கிலாந்து அணிக்கு என்னால் முடிந்தவரை நான் ஆட வேண்டும் என நினைக்கிறேன். இந்த ஆண்டு உலகக்கோப்பை அணியில் ஆட வேண்டும். இம்முறை ஐபிஎல் தொடரில் நான் பங்கேற்றால் காயம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அதேநேரம், இங்கிலாந்து வாய்ப்பை நான் இழக்க கூடும். எனது உயரிய விருப்பம் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு ஆடுவது மட்டுமே. இம்முறை இல்லையென்றாலும் அடுத்த முறை நிச்சயம் ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன். ரசிகர்கள் என்னை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன். இதுவும் நான் ஐபிஎல் தொடரில் இருந்து தற்காலிகமாக விலக முக்கிய காரணம்.”
இவ்வாறாக, இலங்கைஅணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் முன் பயிற்சியின்போது கிறிஸ் வோக்ஸ் பேட்டியளித்தார்.