உன் நல்லதுக்கு தாண்டா தம்பி சொல்றேன்… ஐபிஎல் பக்கமே போயிடாத; ஆஸ்திரேலிய இளம் வீரருக்கு அட்வைஸ் கொடுத்த பிராட் ஹாடின் !!

உன் நல்லதுக்கு தாண்டா தம்பி சொல்றேன்… ஐபிஎல் பக்கமே போயிடாத; ஆஸ்திரேலிய இளம் வீரருக்கு அட்வைஸ் கொடுத்த பிராட் ஹாடின்

ஆஸ்திரேலிய அணியின் இளம் நட்சத்திர வீரரான கேமிரான் க்ரீன், ஐபிஎல் தொடரை புறக்கணிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 16 சீசன்கள் நிறைவடந்துள்ள நிலையில், அடுத்த வருடத்திற்கான தொடர் மார்ச் மாத இறுதியில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 19ம் தேதி நடைபெற உள்ளது.

அடுத்த ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கேமிரான் க்ரீன் ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாடின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிராட் ஹாடின் பேசுகையில், “ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஸ்டார்க் மற்றும் ஹசில்வுட் ஆகியோரை கேமிரான் க்ரீன் முன்னுதாரமனாக எடுத்து கொள்ளலாம். அவர்கள் ஐபிஎல் தொடரை விட ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் அவர் சில ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டு ஆஸ்திரேலிய அணிக்காக தங்களது நேரத்தை முழுமையாக கொடுத்தனர். கேமிரான் க்ரீனும் தனது பனிச்சுமையை குறைத்து கருத்தில் கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். ஐபிஎல் தொடரின் மூலம் அதிகமான விசயங்களை கற்று கொள்ள முடியும் என்பது உண்மை தான், ஆனால் பனிச்சுமையையும் கேமிரான் க்ரீன் கருத்தில் கொள்ள வேண்டும். பனிச்சுமை அதிகமாக இருந்தால் எதையுமே சரியாக முடியாது என்பதால் கேமிரான் க்ரீன் சில விசயங்களை தியாகம் செய்துவிட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு முக்கியத்தும் கொடுக்க வேண்டும். சர்வதேச போட்டிகளில் கேமிரான் க்ரீன் இன்னும் தனது முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. சர்வதேச போட்டிகளில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வரும் கேமிரான் க்ரீன், விரைவில் ஆஸ்திரேலிய அணியின் சிறந்த வீரராக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.