உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் லீக் இதுதான்: தென்னாப்பிரிக்க கேப்டன் டி காக் ஓப்பன் டாக்

உலகக்கோப்பையை விட உணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் ஐபிஎல்-தான் என சொன்னதற்கு இதுதான் காரணம் என குயின்டன் டி காக் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 தொடர் மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2-வது போட்டி நாளை நடக்கிறது.

இந்த போட்டி குறித்து டி காக் பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது உலகக்கோப்பையை காட்டிலும் ஐபிஎல்-தான் உணர்ச்சி ரீதியிலான மிகப்பெரிய தொடர் எனக் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டி காக் பதிலளிக்கையில் ‘‘நான் என்ன சொல்ல வேண்டும்?. நான் இதுவரை வெற்றி பெற்றதில் மிகப்பெரிய விஷயம். நான் உலகக்கோப்பையை இதுவரை வென்றது கிடையாது. ஆகவே, ஒருமுறை நான் உலகக்கோப்பையை வென்றால், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் செய்ததை விட, அது மிகப்பெரியதாக இருக்கும்.

நான் ஒன்றிரண்டு அணிகளுக்கான ஐபிஎல் தொடரில் விளையாடிள்ளேன். அந்த அணிகள் பிளே-ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியதில்லை. நான் மும்பை அணிக்காக விளையாடினேன். அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆகவே எந்தவொரு கிரிக்கெட்டருக்கும் இது மிகப்பெரிய சாதனையாகத்தான் இருக்கும். தற்போது கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும். உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் அணியில் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

தனிப்பட்ட முறையில் இது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். என்னுடைய கருத்து என்னுடையது. அவர்களுடைய கருத்து அவர்களுடையது. ஐபிஎல் கோப்பையை வென்றது இதுவரை என்னுடைய மிகப்பெரிய சாதனை’’ என்றார்.

Quinton de Kock of South Africa during the fifth Momentum One Day International between South Africa and England at Newlands Cricket Ground, Cape Town on 14 February 2016 ©Ryan Wilkisky/BackpagePix

இந்த தொடரில் இந்திய கேப்டன் விராட் கோலி, தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா இடையிலான நீயா-நானா? மோதல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இது குறித்து டி காக்கிடம் கேட்ட போது, ‘இருவருமே சிறந்த வீரர்கள். தங்களது வழியில் நேர்மறை எண்ணத்துடன் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர்கள். அவர்கள் இடையே இது நல்ல மோதலாக இருக்கும். அது ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும்’ என்று குறிப்பிட்டார்.

போட்டி நடக்கும் மொகாலி பேட்டிங்குக்கு சாதகமான மைதானமாகும். இங்கு இதுவரை நான்கு 20 ஓவர் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி ஆடியுள்ள 2 ஆட்டங்களிலும் (இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) வெற்றி பெற்றிருக்கிறது. 2009-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தியா குவித்த 211 ரன்களே ஓர் அணியின் அதிகபட்சமாகும். இந்த ஆட்டத்திலும் ரசிகர்கள் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

Sathish Kumar:

This website uses cookies.