ஐபிஎல் தொடரில் எங்கள் பந்து வீச்சாளர்கள் ஆடுவது எங்களுக்கு கடினம் தான்: பாப் டு ப்லெசிஸ்

தங்கள் அணி முதல் முறையாக உலகக்கோப்பையை வெல்ல பாடுபட்டு வரும் நிலையில் அதற்கு முன்னதாக நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் 2019 பெரும் இடைஞ்சலாக இருக்கப்போகிறது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் உண்மையான கவலையைத் தெரிவித்துள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை உலகக்கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் போட்டி கவலைகளை அதிகரித்துள்ளது. டேல் ஸ்டெய்ன், ரபாடா, அல்லது எந்த ஒரு பவுலர் காயமடைந்தாலும் பெரிய கஷ்டமாகிப் போகும். ஐபிஎல் பணிச்சுமையினால் காயமடைந்தால் உலகக்கோப்பை அடுத்ததாக வரும்போது என்ன செய்வது?” என்று கவலை தெரிவித்துள்ளார்.

டுபிளெசிஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடுகிறார். இவரது அணியிலிருந்து லுங்கி இங்கிடி, இம்ரான் தாஹிர், ரபாடா உட்பட சிலர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுகின்றனர், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், ஆன்ரிச் நார்ட்டியே என்று தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் உள்ளனர்.

மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் மே வரை செல்கிறது, தென் ஆப்பிரிக்கா தன் முதல் உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்தை மே, 30ம் தேதி எதிர்கொள்கிறது.

டுபிளெசிஸ் மேலும் கூறும்போது, “வீரர்கள் குறிப்பாக பவுலர்கள் பணிச்சுமை என் மூளையின் மூலையில் உறுத்திக் கொண்டிருக்கிறது. நான் என் சொந்தப் பார்வையிலிருந்தே இதைக் கவலையாகப் பார்க்கிறேன். ஆனால் இதை யோசிக்கும் அதே வேளையில் எப்போதும் உலகக்கோப்பையையே நினைத்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்து கவனம் தப்பிவிடும்.

ஆனாலும் இப்போதே சில முடிவுகளைச் சிந்திக்க வேண்டும் அப்படி சிந்திக்கும் போதுதான் பின்னால் அது தாக்கம் செலுத்தும்” என்றார் டுபிளெசிஸ். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தன் வீரர்களுக்கு ஐபிஎல் கிரிக்கெட் ஆடுவதன் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதற்கிடையில் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் 30-ந்தேதி தொடங்கி ஜூலை மாதம் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதனால் ஆஸ்திரேலியா போன்ற முன்னணி நாடுகள் நட்சத்திர வீரர்களுக்கு ஐபில் தொடரில் பங்கேற்க வேண்டாம் என அறிவுரை வழங்கியுள்ளது. மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் தானாகவே ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்து இரண்டு வாரத்திற்குள் உலகக்கோப்பை தொடர் வருவதால் ஒவ்வொரு அணிகளும் தங்களது வேகப்பந்து வீச்சு குறித்து கவலை அடைந்துள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு தேவை என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனான டு பிளிசிஸ் லுங்கி நிகிடி, ரபாடா, கிறிஸ் மோரிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.