இந்த விசயத்தில் என்னை விட என் மகள் தான் “பெஸ்ட்”; உண்மையை ஒப்புக்கொண்ட தல தோனி
டான்ஸ் ஆடுவதில் தன்னை விட தனது மகள் ஜிவா தான் பெஸ்ட் என்று தோனியே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுகான தொடர் முக்கிய நகரங்களில் தற்போது நடக்கிறது.
இதில் மேட்ச் பிக்சிங் சர்ச்சையில் சிக்கி, இரண்டு ஆண்டு தடைக்குபின், மீண்டும் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் தோனியின் கேப்டன்சி மிக முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. இது யாராலும் மறுக்க முடியாத உண்மை.
இது தவிர ஐ.சி.சி.,யால் நடத்தப்படும் ஒஅனைத்து தொடர்களிலும் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டன், உலகின் தலை சிறந்த விக்கெட் கீப்பர், தலை சிறந்த கேப்டன் என பல்வேறு அம்சங்களை பெற்றுள்ள தோனி, டாஸ் ஆடுவதில் தன்னை விட தனது மகள் சிறந்தவள் என்று தானே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார்.
தோனி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள ஒரு பதிவில் தனது அன்பு ஜிவா ஆங்கில பாடல் ஒன்றிற்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்டு அதில் டான்ஸ் ஆடுவதில் தந்தையை விட மகள் சிறந்தவள் என்று பதிவிட்டுள்ளார்.
வீடியோ ;
தோனி வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.