போராட்டம் எதிரொலி; சென்னையில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் இடமாற்றம் !!

போராட்டம் எதிரொலி; சென்னையில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் இடமாற்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் எதிரொலியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் வேறு இடத்திற்கு மாற்றப்படுப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

ரசிகர்களின் பெரும் ஆதரவிற்கு மத்தியில் கோலகலமாக நடைபெற்று வரும் இந்த தொடருக்கு தமிழகத்தில் மட்டும் கடும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ஒட்டுமொத்த தமிழகமுமே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராடி வரும் வேளையில் ஐ.பி.எல் போன்ற கேளிக்கைகள் தமிழகத்திற்கு தேவையில்லை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

குறிப்பாக நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை – கொல்கத்தா இடையேயான போட்டி துவங்குவதே ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு பெரும் சிக்கலாக இருந்தது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளிலுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் அரசியல் கட்சிகள் இன்று அறிவித்தன.

இந்நிலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற பி.சி.சி.ஐ.,- ஐ.பி.எல் நிர்வாக ஆலோசனைகள் கூட்டத்தில், சென்னையில் அடுத்து நடைபெற இருந்த அனைத்து போட்டிகளும் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் எந்த மைதானத்தில் எஞ்சியுள்ள போட்டிகள் நடைபெறும் என்று ஐ.பி.எல் நிர்வாகம் இன்னும் அறிவிக்கவில்லை.

ஐ.பி.எல் நிர்வாகத்தின் இந்த முடிவு சென்னை ரசிகர்களுக்கு கவலையான செய்தி தான் என்றாலும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு இது ஒன்று தான் வழி என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.