தயவு செஞ்சு எல்லாம் அப்படியே கிளம்புங்க… 13 வீரர்களை கழட்டிவிட்ட மும்பை இந்தியன்ஸ் அணி
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் குறித்தான முழு விபரம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து, உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை மொத்தம் 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை மட்டும் தக்க வைத்து கொண்டு, மற்ற வீரர்களை விடுவித்து வருகின்றன.
அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த தொடரில் மிக மோசமான தோல்விகளை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, வேறு வழியில்லாமல் ஒட்டுமொத்தமாக 13 வீரர்களை விடுவித்துள்ளது.
கடந்த 13 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த பொலார்டை நீக்க வேண்டிய சூழ்நிலை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டதால், பொலார்ட் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் பொலார்ட் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொலார்டை போன்று, டேனில் சம்ஸ், ஃபேபியன் ஆலன், ரிலே மார்டித், தைமல் மில்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் மும்பை இந்தியன்ஸ் அணி, தனது அணியில் இருந்து விடுவித்துள்ளது.
அதே போல் அர்யன் ஜுயல், பாசில் தம்பி, அன்மோல்ப்ரீட் சிங், ஜெயதேவ் உனாட்கட், முருகன் அஸ்வின், ராகுல் புத்தி, சஞ்சய் யாதவ் போன்ற உள்நாட்டு வீரர்களையும் மும்பை இந்தியன்ஸ் அணி விடுவித்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர்கள்;
கைரன் பொலார்டு, அல்மோல்பிரீட் சிங், அர்யன் ஜுயல், பாசில் தம்பி, டேனியல் சம்ஸ், பேபியன் ஆலன், ஜெயதேவ் உனாட்கட், மாயன்க் மார்கண்டே, முருகன் அஸ்வின், ராகுல், ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், தைமல் மில்ஸ்.
தற்போதைய மும்பை இந்தியன்ஸ் அணி;
ரோஹித் சர்மா, டிம் டேவிட், ரமன்தீப் சிங், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஸ்டப்ஸ், டீவல்ட் பெர்வீஸ், ஜோஃப்ரா ஆர்சர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், அர்ஜூன் டெண்டுல்கர், அர்சத் கான், குமார் கார்த்திகேயா, ஹிர்திக் சோகீன், ஜேசன் பெஹண்ட்ரூஃப், அகாஷ் மத்வால்.
மும்பை அணியின் கையிருப்பில் உள்ள தொகை – 20.55 கோடி.