மகனின் கிரிக்கெட்டிற்க்காக வீட்டை விற்க்கத் தயாரான தந்தை!!
கிரிக்கெட் எனோது இந்தியாவில் ஒரு மதமாகவே விளங்குகிறது. இந்த கால கட்டங்களில் கிரிகெட்டிற்க்காக இடம் மாறுவது, மாநிலம் விட்டு மாநிலம் செல்லுவது என பலவற்றை தியாகம் செய்கின்றனர்.
தற்போது அதைப் போலவே, தற்போது ராஜஸ்தானைத் சேர்ந்த நாது சிங் என்ற வேகப்ந்து வீச்சாளர் மற்றும் அவ்ரௌடைய பெற்றோர் அவ்வாறு சில தியாகங்கலை செய்துள்ளனர்.
மாதம் ₹.8000 -/ ற்கு வேலைக்கு செல்கிறார் நாது சிங்கின் தந்தை. குடும்பம் பொருளாதார ரீதியாக எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர் தங்கள் வீட்டை நாது சிங்கின் கிரிக்கெட்டிற்க்காக விற்க்கவும் முன்வந்துள்ளனார்.
ஆனால், தற்போது 2016 ஐ.பி.எல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3.20 கோடிக்கு எடுத்துள்ளது அவரை. இதனால் அவர்களது தியாகத்திற்க்கு விடிவு கிடைத்துள்ளதாக கருதுகிறார்கள்.
தற்போது தனது மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் 1.70 மதிப்பில் ஒரு வீடு ஒன்றை கட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015-16 ரஞ்சி ட்ராபியில் நாது டெல்லிக்கு எதிரான தனது அறிமுக போட்டியில் அபாரமாக விளையாடி 87 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்ளை வீழ்த்தினார.
இதுவரை, 13 முதல் தரப் போட்டியில் விளையாடியுள்ள நாது சிங் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் இரண்டு 5 ஃபெர் அடங்கும்.
மேலும், 15 லிஸ்ட் ஈ போட்டியில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.