ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா வரும் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடக்க ஆட்டமும், இறுதிப் போட்டியும் நடக்கிறது.
அதில் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதிமுறை மாற்றம் முக்கியமானதாகும். வருகிற 27-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை வீரர்களின் மெகா ஏலம் நடக்கிறது. இதில் 578 வீரர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது. இதில் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை சுமார் 62 நாட்கள் போட்டியை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியையும், இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் 2-வது ஆட்டம் அல்லது இரவு ஆட்டம் இதுவரை இரவு 8 மணிக்கு தொடங்கியது. போட்டி முடிவதற்கு நள்ளிரவு ஆகும் என்பதால் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 8 மணிக்கு தொடங்கும் போட்டியை 7 தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியை 5.30 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நேரடி ஒளிப்பரப்பு உரிமம் பெற்றுள்ள நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது.
Photo by Vipin Pawar – Sportzpics – IPL