பெங்களூர் அணியின் மானம் காத்த 10 வீரர்கள் !!

பெங்களூர் அணியின் மானம் காத்த 10 வீரர்கள்

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் 19ம் தேதி துவங்க உள்ளது. கொரோனாவின் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை நடத்த முடியாத சூழல் நிலவுவதால் துபாயில் வைத்து ஐபிஎல் தொடர் நடத்தப்பட்ட உள்ளது.

இந்தநிலையில், ஐ.பி.எல் தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இதுவரை அதிக ரன்கள் எடுத்து கொடுத்துள்ள டாப் 10 வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

1- விராட் கோஹ்லி

பெங்களூர் அணியின் கேப்டனான விராட் கோஹ்லியே பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளார். பெங்களூர் அணிக்காக விளையாடிய 177 போட்டிகளில் 5412 ரன்கள் எடுத்துள்ளார் விராட் கோஹ்லி.

2 – டிவில்லியர்ஸ்

பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் 126 போட்டிகளில் விளையாடி மொத்தம் 3724 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 159.55 ஆகும்.

3- கிரிஸ் கெய்ல்

அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெய்ல் பெங்களூர் அணிக்காக விளையாடிய வெறும் 85 போட்டிகளில் 3163 ரன்கள் குவித்துள்ளார். கெய்லின் ஸ்ட்ரைக் ரேட் 152.72 ஆகும்.

4 – ஜெக் காலிஸ்

தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் ஜாம்பவான்களில் ஒருவரான ஜெக் காலிஸ், பெங்களூர் அணிக்காக வெறும் 42 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் 1132 ரன்கள் குவித்து இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார்.

5 – ராகுல் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவனான ராகுல் டிராவிட், பெங்களூர் அணிக்காக 43 போட்டிகளில் விளையாடி அதில் 898 ரன்கள் குவித்துள்ளார். டிராவிட்டின் ஸ்ட்ரைக் ரேட் 122.84 ஆகும்.

6 – பார்த்தீவ் பட்டேல்;

பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பரான பார்த்தீவ் பட்டேல், பெங்களூர் அணிக்காக 32 போட்டிகளில் விளையாடி 731 ரன்கள் குவித்துள்ளார்.

7- மந்தீப் சிங்

இளம் வீரரான மந்தீப் சிங், பெங்களூர் அணிக்காக 40 போட்டிகளில் விளையாடி அதில் 597 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த பட்டியலில் 7வது இடத்தில் உள்ளார்.

8 – திலகர்த்தனே தில்ஷன்

இலங்கை அணியின் முன்னாள் வீரரான தில்ஷன் பெங்களூர் அணிக்காக தான் விளையாடிய 25 போட்டிகளில் 587 ரன்கள் எடுத்துள்ளார்.

9 – ராபின் உத்தப்பா

இந்திய அணியின் சீனியர் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூர் அணிக்காக தான் விளையாடிய 31 போட்டிகளில் 549 ரன்கள் எடுத்துள்ளார்.

10 – ராஸ் டெய்லர்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர், பெங்களூர் அணிக்காக தான் விளையாடிய 22 போட்டிகளில் 517 ரன்கள் எடுத்து கொடுத்துள்ளார்.

Mohamed:

This website uses cookies.