ஒரு நேரத்தில் ஒரு தொடரில் கவனம் செலுத்த உள்ளேன்.. சஹால்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் சஹால் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆட உள்ளார். அப்போது இதுகுறித்து கேட்கையில் ஒரு நேரத்தில் ஒரு நேரத்தில் ஒரு தொடரில் கவனம் செலுத்த உள்ளேன். அடுத்த தொடரை நடப்பு தொடர் முடிந்த பின்பு யோசிப்பது தான் சரி என கூறினார்.

Indian cricketer Yuzvendra Chahal celebrates after he dismissed Bangladesh cricketer Tamim Iqbal during the final Twenty20 international cricket match between Bangladesh and India of the Nidahas Trophy tri-nation Twenty20 tournament at the R. Premadasa stadium in Colombo on March 18, 2018. / AFP PHOTO / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)

தற்போது இந்திய அணியில் முன்னணி சுழல் பந்துவீச்சாளராக வலம் வரும் சஹால், மைதானத்தில் நிலை அறிந்து அதற்க்கு ஏற்றார் போல் பந்து வீசி விக்கெட் வீழ்த்தும் லாவகம் உடையவர். அஸ்வின் இடத்திற்கு பதிலாக உள்ளே வந்து நிரந்தரமாக லிமிடெட் ஓவர் போட்டிகளில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டார்.

நேர்த்தியாக பந்து வீசி குறைவான ரன்களையே விட்டு கொடுக்கும் பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். இவர் தற்போது அயர்லாந்து இங்கிலாந்து செல்லும் அணியில் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இடம் பெற்றுள்ளார். இதற்காக தீவிரமாக பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

Yuzvendra Chahal of India during the 3rd One Day International match between South Africa and India held at the Newlands Cricket Ground in Cape Town, South Africa on the 7th February 2018
Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

இதுகுறித்து அவரிடம் கேட்கையில், நாங்கள் தென்னாபிரிக்காவில் ஆடியுள்ளோம் அங்கு எங்களுக்கு சாதகமாகவும் அமைந்தது. அதேபோல் இங்கும் சிறப்பாக செயல்பட காத்திருக்கிறோம். அணியின் பெயரை வைத்து எளிதில் கூறி விட முடியாது. எனது முழு முயற்சியை நிச்சயம் காட்டுவேன் என கூறினார்.

தற்பொழுது அயர்லாந்து தொடரை வெல்வது தான் எங்களது குறிக்கோள். இங்கிலாந்து தொடரை இது முடிந்தவுடன் பார்ப்போம். ஒரு நேரத்தில் ஒரு தொடரை பற்றிய சிந்தனை இருப்பது தான் சரி.

India’s bowler Yuzvendra Chahal, right, celebrates with captain Virat Kohli, center, after dismissing South Africa’s batsman Quinton de Kock‚ for 20 runs during the second One Day International cricket match between South Africa and India at Centurion Park in Pretoria, South Africa, Sunday, Feb. 4, 2018. (AP Photo/Themba Hadebe)

உலககோப்பைக்கு வெகு நாட்கள் இல்லை. அதற்கும் தீவிரமாக பயிற்சி செய்ய வேண்டும். தற்போது வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் உலககோப்பைக்கு பெரும் உதவியாக இருக்கும். வெல்வதற்கு கடுமையாக முயற்சிப்போம். கடந்த இரண்டு முறை தொடரை விட்டது போல் இம்முறை நிச்சயம் நடக்காது எனவும் தெரிவித்தார்.

இன்று இந்திய அணி அயர்லாந்து அணியுடன் முதல் டி20 போட்டியை அயர்லாந்தில் ஆட உள்ளது.

Vignesh G:

This website uses cookies.