ஆட்டத்துல நாங்களும் இருக்கோம்; டி.20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது அயர்லாந்து
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியை ஆடிவரும் அயர்லாந்து அணி அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 போட்டித் தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற்றது.
நேற்று அபுதாபியில் நடைபெற்ற கனடாவுக்கு எதிரான பிரிவு பி போட்டியில் யு.ஏ.இ. அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து யு.ஏ.இ. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.
ஆனால் யு.ஏ.இ.யின் வெற்றி அயர்லாந்தை சாய்க்க முடியவில்லை, காரணம் அயர்லாந்து நெட் ரன் விகிதம் அடிப்படையில் குரூப் பி-யில் முதலிடத்தில் இருப்பதால் டி20 உலகக்கோப்பை பிரதான போட்டித் தொடருக்கு தகுதி பெற்றது.
முன்னதாக குரூப் ஏ- பிரிவில் டாப் அணியாகத் திகழ்ந்த பபுவா நியு கினியா உலகக்கோப்பை டி20 தொடருக்கு தகுதி பெற்றதையடுத்து, இரண்டாவதாக தற்போது அயர்லாந்து அணி தகுதி பெற்றது.
நேற்றைய போட்டியில் யு.ஏ.இ. அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய கனடா அணி 140/5 என்று தோல்வி கண்டது.
இந்த ஆட்டம் தொடங்கும் போது கனடாவுக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் நுழைய ஒரு வாய்ப்பு இருந்தது, ஆனால் தோல்வியினால் குரூப் பி-யில் 5ம் இடத்தில் முடிந்தது. 6 போட்டிகளில் 3-ல் மட்டுமே கனடா வெற்றி கண்டிருந்தது.
இந்நிலையில் பபுவா நியு கினியாவுக்கு அடுத்தபடியாக அயர்லாந்து தகுதி பெற்றுள்ளது.