ஒருநாள் போட்டிகளிலிருந்து கெவின் ஓ பிரையன் ஓய்வு, பதினைந்து வருட ஒருநாள் போட்டி பயணம் !!!!
ஒருநாள் போட்டிகளில் அயர்லாந்து அணியை சேர்ந்த அதிரடி ஆல்ரவுண்டர் வீரர் கெவின் ஓ பிரையன் இன்னொரு தன்னுடைய ஓய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளார். 37 வயதான இவர் அயர்லாந்து அணிக்காக 153 ஒரு நாள் போட்டிகளில் இதுவரை 3618 ரன்கள் குவித்திருக்கிறார். அயர்லாந்து அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த 3வது வீரராக இவர் தற்பொழுது திகழ்கிறார். ஒருநாள் போட்டிகளில் இவரது பேட்டிங் ஆவரேஜ் 29.41 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 88.72 ஆகும்.
மேலும் பந்துவீச்சிலும் இவர் மிக சிறப்பாக செயல்பட்டு 114 விக்கெட்டுகளை அயர்லாந்து அணிக்காக கைப்பற்றியிருக்கிறார்.அதேசமயம் 68 முறை கேட்ச் பிடித்து எதிரணி வீரர்களை அயர்லாந்து அணிக்காக அவுட் செய்திருக்கிறார்.அயர்லாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியது மற்றும் அதிக கேட்சுகளை கைப்பற்றிய ஒரே வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
ஓய்வு அறிக்கையை வெளியிட்ட கெவின் ஓ பிரையன்
15 வருடங்களாக அயர்லாந்து அணைக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். 153 முறை அயர்லாந்து அணி சார்பாக ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய தருணங்களை எனது வாழ்நாளில் நான் கடைசிவரை ஞாபகம் வைத்து இருப்பேன்.
இது சற்று கடினமான செய்தி என்றாலும் கடந்த சில தொடர்களில் நான் சிறப்பாக விளையாடவில்லை என்று எண்ணுகிறேன். எனவே இந்த முடிவை எடுப்பது தற்பொழுது சரி என்று கெவின் ஓ பிரையன் விளக்கம் அளித்துள்ளார்.
டி20 போட்டியில் கவனம் செலுத்தும் திட்டம்
ஒருநாள் போட்டிகளில், அயர்லாந்து அணிக்காக மூன்று முறை உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்று விளையாடி இருக்கிறேன். தற்பொழுது ஒருநாள் போட்டிகளிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு டி20 போட்டிகளில் கவனம் செலுத்த இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இன்னும் 18 மாதங்களில் இரண்டு உலகக் கோப்பை டி20 தொடர் நடைபெற இருப்பதால், அயர்லாந்து அணிக்காக சிறப்பாக விளையாட அனைத்து பயிற்சிகளையும் மேற்கொள்ளப் போகிறேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் டெஸ்ட் போட்டிகளிலும் கவனம் செலுத்தப் போவதாக கெவின் ஓ பிரையன் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்
உலக கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த கெவின் ஓ பிரையன், இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடல்
2011 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். தற்பொழுது வரை உலக கோப்பை தொடரில் அதிவேக சதம் அடித்த வீரர் ஆக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் அவரைப் பற்றி சமீபத்தில் பேசியுள்ள அயர்லாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிரஹாம் ஃபோர்ட், கெவின் ஓ பிரையன் உடன் இணைந்து வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியான தருணங்கள் என்று கூறியிருக்கிறார். மேலும் இளைஞர்களுக்கு அவனை எப்பொழுதும் ஒரு ரோல் மாடலாக இருந்து இருக்கிறார் என்றும் அவரை புகழ்ந்து இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்று இருந்தாலும் மற்ற கிரிக்கெட் பார்மெட்களில் அவருடன் இணைந்து அயர்லாந்து அணிக்காக நான் வேலை செய்ய ஆர்வமாக இருக்கிறேன் என்று கிரஹாம் ஃபோர்ட் கூறியுள்ளார்.