இந்தியா – அயர்லாந்து இரண்டாவது டி.20 போட்டி; முதலில் பேட்டிங் செய்கிறது இந்திய அணி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அயர்லாந்து சென்றுள்ள பும்ராஹ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் டி.எல்.எஸ் முறைப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெறுகிறது.
டப்லின் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இரண்டாவது போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவனிலும் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இரண்டாவது டி.20 போட்டிக்கான ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவன்;
யசஸ்வி ஜெய்ஸ்வால், ருத்துராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சிவம் துபே, வாசிங்டன் சுந்தர், பிரசீத் கிருஷ்ணா, அர்ஸ்தீப் சிங், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், ரவி பிஸ்னோய்.
இரண்டாவது டி.20 போட்டிக்கான அயர்லாந்து அணியின் ஆடும் லெவன்;
ஆண்ட்ரியூ பல்பர்னே, பவுல் ஸ்டிர்லிங், லார்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் சாம்பர், ஜார் டாக்ரெல், மார்க் அடைர், பாரி மெக்ராத்தி, கிராய்க் யங், ஜோசுவா லிட்டில், பென்ஞமின் வொய்ட்.