அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் சீன் டெர்ரி 26 வயதில் ஓய்வு.

அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் சீன் டெர்ரி 26 வயதில் ஓய்வு.

சமீப காலமாக ஓய்வு பெறும் வயது மிகவும் குறைந்து வருகிறது. உடல் சோர்வினாலும் இயலாமையாலும் ஓய்வு பெற்று வந்த காலம் போய் தற்போது அவந்த காரணங்களுக்காக ஓய்வு பெற துவங்கி விட்டனர் வீரர்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தின் ஜேம்ஸ் டெய்லர் தனது இதயத்தில் பிரச்சனை இருப்பதால் ஓய்வு பெறுகிறேன் என சென்றார். தற்போது அயர்லாந்து நாட்டிற்காக ஆடிய சீன் டெர்ரி என்ற 26 வயது இளம் வீரர் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்துள்ளார்.

கிரிக்கெட்டை வோடுத்து தனது வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு சென்று புதிய அத்யாயத்தை துவங்க உள்ளதாக கூறியுள்ளார் சீன். நேற்று காலை இந்த அறிவிப்பினை வெளியிட்டார் இவர்.

இவர் இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டன் நகரில் பிரிந்துள்ளார். பின்னர் ஆஸ்திரேலியாவிற்கு குடி பெயர்ந்து அங்கு வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிக்காக அண்டர்19 தொடரில் ஆடினார்.

ஆஸ்திரேலியா அண்டர்-19 அணியில் இடம் கிடைக்கததால் இங்கிலாந்து சென்று கவுண்ட்டி கிரிக்கெட்டில் ஆட துவங்கினார்.

ஹாம்பஸைர் அணிக்காகவும் நாட்டிங்கம்ஸைர் அணிக்காகவும் கவுண்ட்டி தொடர்களில் ஆடியுள்ளார் சீன் டெர்ரி. பின்னர் அய்லாந்து அணிக்காக தேர்வாகி ஆடியுள்ளார்

இது குறித்து அயர்லாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் ஹார்ஸ்டவ்ர்த் கூறியதாவது,

அவரது முடிவு எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அவர் அயர்லாந்து அணிக்காக ஆடியுள்ளார். மேலும் அவர் திறமை சாலிகளுக்கான குழுவிலும் உள்ளார். அவரத்திய முடிவு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது.

என கூறினார் அவர்.

சீன் டெர்ரி 19 முதல் தர போட்டியிலும் 22 லிஸ்ட் ஏ போட்டியிலும் 7 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

Editor:

This website uses cookies.