கோலிவுட்டில் குதிக்கப்போகும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்: படத்தின் விவரம் இதோ!

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்ச்சத்திர ஆட்டகாரருமான ஹர்பஜன் சிங், தமிழ் திரைப்படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் சென்னை அணிக்கு ஆடத்தொடங்கியது முதல் தனது ட்விட்டர் பதிவுகளால் தமிழக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரின் போது அவரின் தமிழ் ட்வீட்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் இவர் தற்போது முதல் முறையாக தமிழ் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. .

தொடர்ந்து தமிழ் ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹர்பஜன்சிங் தனது சினிமா பயணத்தை தமிழில் இருந்தே தொடங்க இருக்கிறார். நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா என்ற திரைப்படத்தில் ஹர்பஜன் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதே போன்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியவருமான இர்ஃபான் பத்தான், நடிகர் விக்ரமின் 58வது படத்தில் நடிக்கவிருப்பதாக மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக பந்துவீசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய ஹர்பஜன் மற்றும் இர்ஃபான் பத்தான், சினிமாவிலும் தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்துவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

தமிழ் சினிமாவில் இருந்து கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்ட ஹன்சிகா, தற்போது ’மகா’ என்ற படத்தில் சிம்புவுடன் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் மீண்டும் ஒரு திகில், காமெடி படத்தில் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். யோகிபாபு நடித்த ’தர்ம பிரபு’ படத்தை தயாரித்த ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை ஹரி ஹரிஸ் என்று இயக்குனர் இயக்கவுள்ளார்.

பேய், காமெடி, திகில் மற்றும் குடும்ப சென்டிமென்ட் என அனைத்தும் அமைந்துள்ள இந்த படத்தில் ஹன்சிகா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்க உள்ளதாகவும், இந்த படம் ஸ்ரீகாந்துக்கு தமிழில் ஒரு சிறப்பான எண்ட்ரியாக இருக்கும் என்றும் அவருடைய கேரக்டர் மிகவும் கொடூரமாக அமைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களிடம் இருந்து அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Sathish Kumar:

This website uses cookies.