இந்தியாவின் சிறந்த கேப்டன்களுள் ஒருவர் கங்குலி. இன்று 46வது பிறந்தநாள் கொண்டாடும் கங்குலிக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. அதில், எனது முதல் கேப்டனுக்கு வாழ்த்துக்கள் என இர்பான் பதான் கங்குலிக்கு பிறந்தநாள் வாழ்த்தினை தெரிவித்தார்.
2003-04ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா மண்ணில் சென்று அவர்களையே அச்சுறுத்திய பெருமைக்காக இன்றளவும் கிரிக்கெட் ரசிகர்களால் கங்குலியை மறக்க முடியாது. இன்று ஜாம்பவான்களாக வலம்வரும் பலரும் அன்று கங்குலியின் கேப்டன் பொறுப்பில் கத்துக்குட்டிகளாக வந்தவர்கள் தான்.
இர்பான் பதானும் கங்குலியின் கேப்டன் பொறுப்பில் தான் தனது சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார்.
ஆஸ்திரேலியாவில் தனுசு சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்திய பதான், தனது இந்த செயல்பாட்டிற்கு காரணம் கங்குலி அளித்த உத்வேகமும், நம்பிக்கையும் தான் காரணம் எனவும் கூறினார். மாத்தியூ ஹேடனை வீழ்த்தி தனது முதல் டெஸ்ட் விக்கெட்டை பெற்றார்.
அந்த வருடத்தின் சிறந்த பந்தாக இர்பான் பதான் கில்கிறிஸ்ட் க்கு வீசிய இன்ஸ்விங் யார்கர் பந்து தான் தேர்வு செய்யப்பட்டது.
இதனை மறக்காமல் நன்றி செலுத்தும் விதமாக தற்போது பிறந்தநாள் வளத்தை தாதாவிற்கு தெரிவித்துள்ளார் பதான்
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியதாவது, எனது மனநிலையை மாற்றி வெளியில் சென்று மிக பெரிய வீரர்களை சவால் செய்ய அறிவுறுத்திய முதல் கேப்டன் மற்றும் தலைவர் கங்குலிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்.
மேலும், இந்திய அணியிக்காக இன்று நாம் கேட்கும் சத்தம் எல்லாம் அப்போது கங்குலி அடித்தளமிட்டு சென்றது தான் எனவும் கூறினார்.