“ஓபனிங் ஜோடியை தூக்க இதை மட்டும் பண்ணுங்க..” – இந்திய பவுலர்களுக்கு செம்ம ஐடியா கொடுத்த முன்னாள் வீரர்!

பாகிஸ்தான் அணியின் துவக்க ஜோடியை விக்கெட் எடுப்பதற்கு இதை மட்டும் செய்யுங்கள் என இந்திய பாவலர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான்.

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை மெல்போர்ன் மைதானத்தில் எதிர்க்கிறது. இப்போட்டியில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியை காண உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கின்றனர்.

இதற்கு முன்னர் ஆசிய கோப்பை தொடரில் இரண்டு முறை இந்த அணிகள் மோதிக்கொண்டது. தலா ஒரு போட்டியை இரு அணிகளும் வென்றிருக்கிறது. மேலும் கடந்த உலக கோப்பை டி20 தொடரில் முதல்முறையாக இந்தியாவை வீழ்த்தியது. பாகிஸ்தான் அணி இம்முறை அதற்கு பலி தீர்க்குமா? இல்லையா? என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அணிக்கு அதன் துவக்க ஜோடிகள் முகமது ரிஸ்வான் மற்றும் கேப்டன் பாபர் அசாம் இருவரும் மிகுந்த நம்பிக்கையாக இருக்கின்றனர். நம்பர் ஒன் ரேங்கிங்-கில் இருக்கும் முகமது ரிஸ்வான் இந்த ஆண்டு 18 போட்டிகளில் விளையாடி 821 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒன்பது அரைசதங்களும் அடங்கும். அதேபோல் பாபர் அசாம் நம்பர் 3 ரேங்கிங்-கில் இருக்கிறார் 19 போட்டிகளில் 611 ரன்கள் இவர் அடித்திருக்கிறார். இதில் நான்கு அரை சதங்கள் அடங்கும்.

இந்த இரண்டு வீரர்களை தூக்கி விட்டால் பாகிஸ்தான் அணி ஆட்டம் கண்டு விடும் என பல்வேறு போட்டிகளில் தெளிவாக தெரிந்தது. இதன் அடிப்படையில் இந்த ஜோடியை தூக்குவதற்கு சில நுணுக்கங்களையும் அறிவுரைகளையும் கூறியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இர்பான் பதான்.

“இருவருக்கும் பந்து வீசுகையில்  பேட்டிற்கு வெளியே பந்து வீசாதீர்கள். உடலை நோக்கி, ஸ்டம்பை நோக்கி வீசுங்கள். குறிப்பாக முகமது ரிஸ்வான் சற்று இடம் கொடுத்தால் அதிகமாக ரன்களை அடிக்கிறார். குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் அபாரமாக ஆடுகிறார். ஆகையால் அவருக்கு உடலில் அல்லது ஸ்டம்ப் திசையில் பந்து வீசுங்கள். இருவரும் அதுபோன்ற சூழலில் மிகவும் திணறி இருக்கிறார்கள்.

இந்திய வீரர்களின் லைன் மற்றும் லென்த் இருவருக்கும் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். சிறிது தவறு ஏற்பட்டாலும் ரன்களை அடித்து விடுவார்கள். பாபர் அசாமிற்கு இன்-ஸ்விங் டெலிவரி நன்றாக எடுபடும். ஏனெனில் அவர் அதிக அளவில் எல்பிடபிள்யூ ஆவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. புவனேஸ்வர் குமார், அர்சதீப் சிங் இருவரும் நல்ல இன்-ஸ்விங் வீசுவதால் இவர்களை பயன்படுத்தலாம்.” என்றும் தனது அறிவுரையில் கூறினார்.

Mohamed:

This website uses cookies.